அவகேடோ பழத்தின் (வெண்ணெய் பழத்தின்) நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Avocado Benefits, Uses and Side Effects in Tamil
நாம் வாழும் இந்த உலகில் பல்வேறுபட்ட பழ வகைகள் உள்ளன; அவற்றில் பல மக்களால் இன்னமும் சரிவர அறியப்படாத ஒரு பழம் Avacado – அவகேடோ ஆகும். இதனை ஆங்கிலத்தில் Avacado – அவகேடோ என்றும், தமிழில் வெண்ணெய்ப்பழம் என்றும் அழைப்பர். பெரும்பாலான பழங்கள் கார்போஹைட்ரேட், புரதம், நார்ச்சத்து போன்றவற்றை கொண்டுள்ளன; ஆனால், அதிகமான ஆரோக்கிய கொழுப்புச் சத்தினை கொண்டிருப்பதில்லை.
அவகேடோ பழத்தில் பல ஊட்டச்சத்துக்கள் அடங்கி இருப்பதுடன், அதிகளவு ஆரோக்கியமான கொழுப்புச் சத்துக்களும் நிறைந்துள்ளன. அவகேடோ என்று அழைக்கப்படும் வெண்ணெய்ப்பழம் சத்து நிறைந்தது என்ற விஷயத்தை கடந்து, இதில் ஏகப்பட்ட நன்மைகள் நிறைந்துள்ளன; இப்பழம் குறித்து நீங்கள் அறியாத பல விஷயங்கள் உள்ளன. அவை அனைத்தை பற்றியும் இப்பதிப்பில் ஒவ்வொன்றாக பார்க்கலாம்.
அவகேடோ பழத்தின் நன்மைகள் – Benefits of Avocado in Tamil
முன்பு கூறியது போல், அவகேடோ எனும் வெண்ணெய் பழம் பெருமளவு நன்மைகளை அளிக்கக்கூடியது; இப்பழம் வழங்கும் எல்லா வித நன்மைகளையும் பற்றி இங்கு பார்க்கலாம்.
நன்மை 1: இதய ஆரோக்கியம்
அவகேடோ எனும் வெண்ணெய்ப்பழம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், இப்பழம் உண்பவர்களில், இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் HDL எனும் நல்ல கொழுப்பின் அளவு அதிகரிப்பது கண்டறியப்பட்டுள்ளது; இதனை சரிபார்க்க, நீண்ட காலத்திற்கு இந்த பழத்தை உண்ட அதிகமான நபர்களின் தகவல்கள் அவசிய தேவையாகின்றது (1).
தினசரி உணவு முறையில் அவகேடோ எனும் வெண்ணெய்ப்பழத்தை சேர்த்துக்கொள்வது, கார்டியோ வாஸ்குலர் நோயை ஏற்படுத்த காரணமாக திகழும் LDL கொழுப்புகளின் அளவுகளை குறைக்க உதவுகிறது (2). இப்பழத்தில் நிறைந்துள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் (ஒற்றை நிறைவுறா) கொழுப்புகள் இந்த மாற்றத்திற்கு காரணமாகலாம் என்று மற்றொரு ஆய்வு கருத்து தெரிவித்துள்ளது.
HDL கொழுப்பு மீது எந்த ஒரு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல், ஹைப்பர்லிபிடிமியா எனும் இரத்த கொழுப்பு குறைபாட்டினை குணப்படுத்த அவகேடோ உதவும்; இதனை உணவு முறைகளில் அடிக்கடி சேர்த்து கொள்வது ஆரோக்கியமான பலன்களை பெற உதவும் (3).
பல ஆராய்ச்சி படிப்பினைகள், பழுத்த அவகேடோ பழங்கள் சிறந்தவை என்று கூறுகின்றன; பழுத்த வெண்ணெய் பழங்களில் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் குறைந்து, ஒலெயிக் அமிலம் எனும் மோனோ அன்சாச்சுரேட்டட் (ஒற்றை நிறைவுறா) கொழுப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படும் (4). வெண்ணெய் பழங்களில் காணப்படும் பொட்டாசியம் சத்துக்கள் இரத்த அழுத்தத்தை சீரமைக்க உதவும்; இது மேம்பட்ட இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
நன்மை 2: செரிமானம்
மனித உடலின் செரிமானத்தை மேம்படுத்த அவகேடோவில் இருக்கும் நார்ச்சத்து பெரிதும் உதவுகிறது; மேலும் இதில் காணப்படும் பொட்டாசியம் சத்து, ஆரோக்கியமான செரிமானத்தை தூண்டி விடுகிறது. அவகேடோ எனும் வெண்ணெய்ப்பழத்தில் ஃப்ரக்டோஸ் சத்து குறைந்து காணப்படுவதால், சில சமயங்களில் இதனால் வயிற்றில் வாயுத்தொல்லை ஏற்படலாம் (5).
வயிற்றுப்போக்குடன் போராடி, அதனை விரட்ட அவகேடோக்கள் முக்கிய உணவாக கருதப்படுகின்றன; உடலில் இருந்து வெளியேறிய எலெக்ட்ரோலைட்களை மீண்டும் பெற அவகேடோவில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் உதவும். டையேரியா எனும் வயிற்றுப்போக்கில் இருந்து முற்றிலும் நலம் பெற, அவகேடோக்களின் மீது சிறிது உப்பினை தூவி உட்கொள்ளலாம் (6).
நன்மை 3: உடல் எடை குறைத்தல்
அவகேடோவை தினமும் உட்கொள்ளும் நபர்களில், உடல் எடை, இடுப்பு சுற்றளவு, BMI எனும் உடல் எடை குறியீட்டு எண் போன்றவை குறைவான அளவில் இருப்பதாக ஆய்வு படிப்பினைகள் தெரிவிக்கின்றன (7). அவகேடோ உடலில் வளர்ச்சிதை மாற்ற குறைபாடு ஏற்படும் வாய்ப்பை குறைக்க, இதில் இருக்கும் மோனோ அன்சாச்சுரேட்டட் (ஒற்றை நிறைவுறா) கொழுப்பு அமிலம் மற்றும் நார்ச்சத்து உணவு முறை முதலியவை முக்கிய உதவியை புரிகின்றன. வெண்ணெய்ப்பழம் ஹைபோலிபிடிமியா செயல்பாட்டிலும் ஈடுபடுவதால், இது உடல் பருமனை குறைக்க உதவுகிறது (8).
வெண்ணெய்ப்பழத்தில் (Butter fruit) காணப்படும், மோனோ அன்சாச்சுரேட்டட் (ஒற்றை நிறைவுறா) கொழுப்பு அமிலங்கள் உடல் எடை பராமரிப்பு, பசி உணர்வு, ஆற்றல் வளர்சிதை மாற்றம் போன்றவற்றின் மேம்பாட்டில் அதிக பங்களிக்கின்றன (9).
நன்மை 4: மேம்பட்ட கண் பார்வை
லூடெய்ன், ஜியாக்சாந்தின் மற்றும் கரோட்டினாய்டுகள் ஆகிய சத்துக்கள் கண்ணின் பார்க்கும் திறனை அதிகரிக்க உதவுகின்றன. இந்த சத்துக்கள் வயது சார்ந்த தசைகள் சீர்கேடாகாமல், கேடராக்ட்கள் மற்றும் இதர கண் கோளாறுகள் உருவாகாமல் தடுக்கின்றன (10).
ஒரு ஆராய்ச்சி படிப்பினையில், அவகேடோவை உணவு முறையில் சேர்த்துக் கொண்டால் அது உடல் கரோட்டினாய்டுகளை உறிஞ்ச உதவுகிறது எனும் சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது; வெண்ணெய்ப்பழம் கண்ணின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது (11).
வயதான நபர்களில் ஏற்படக்கூடிய மாகுலர் நிறமி அடர்த்தியை அதிகரிக்க, அவகேடோ உதவுகிறது (12). நீல நிற வெளிச்சத்தை வடிகட்டி, கண் பார்வையை மேம்படுத்தும் அமைப்பாக மாகுலர் நிறமி செயல்படுகிறது. இந்த வெண்ணெய்ப்பழத்தில் காணப்படும் வைட்டமின் இ, கண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மற்றொரு முக்கிய ஆன்டி ஆக்சிடென்ட் சத்தாகும் (13).
அவகேடோ பழங்களில் லூடெய்ன், ஜியாக்சாந்தின் மற்றும் கரோட்டினாய்டுகள் முதலிய கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்துக்கள் நிறைந்துள்ளன (14).
நன்மை 5: புற்றுநோய்
அவகேடோ பழங்களில் காணப்படும் அவகேட்டின் பி எனும் பிரத்யேக கொழுப்பு, கொடிய புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய லுகேமியா தண்டு செல்களுடன் சண்டையிட்டு போராடும் தன்மை கொண்டது (15).
மற்றொரு ஆய்வு படிப்பினையில், அவகேடோ பழத்திலிருந்து எடுக்கப்பட்ட சாறு புரோஸ்டேட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கக்கூடியது; மேலும் இந்த பழத்தில் காணப்படும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் ஃபைட்டோ வேதிப்பொருட்கள் போன்றவை புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கும் தன்மை கொண்டுள்ளன என்பது போன்ற தகவல்கள் கூறப்பட்டுள்ளன (16).
அவகேடோவில் காணப்படும் ஃபைட்டோ வேதிப்பொருட்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து, அவற்றை தாக்கி அழிக்கக்கூடியது (17).
பிறிதொரு ஆய்வு படிப்பினையில், ஃபைட்டோ வேதிப்பொருட்கள் என்பவை, உணவுக்குழாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க உதவுபவையாக திகழ்கின்றன (18).
நன்மை 6: வாய் ஆரோக்கியம்
அவகேடோவில் இயற்கையிலேயே வாயை சுத்தம் செய்யக்கூடிய, வாய்க்கு புத்துணர்வு அளிக்கக்கூடிய சத்துக்கள் நிறைந்துள்ளன; இதனை இயற்கை வாய் சுத்தப்படுத்தி (நேச்சர் மவுத் வாஷ்) என்று அழைக்கின்றனர்.
வெண்ணெய்ப்பழம் வாயின் ஆரோக்கியம் மட்டுமில்லாமல், குடல், நாக்கு முதலிய பகுதிகளை சுத்தம் செய்து, அவற்றில் இருக்கும் கிருமிகளை போக்கி, வாய் துர்நாற்றம் ஏற்படாமல் பாதுகாக்க உதவும்..
நன்மை 7: எலும்பு ஆரோக்கியம்
சமைக்கப்படாத அல்லது பழுக்காத அவகேடோவில் போரான் எனும் தாது நிறைந்திருக்கிறது; அது கால்சியம் சத்தினை நன்கு உறிஞ்சி எலும்புகளை பலப்படுத்த உதவும் (19).
வெண்ணெய்ப்பழங்களில், வைட்டமின் கே சத்து அதிகம் இருப்பதால், அது எலும்பின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமின் சத்து எலும்பின் உருவாக்கத்தை அதிகரித்து, ஆஸ்டியோ எலும்பு நோய்கள் ஏற்படாமல், பாதுகாக்க உதவுகிறது (20).
நன்மை 8: கல்லீரல் ஆரோக்கியம்
அவகேடோக்களில் அதிகமான ஆரோக்கிய கொழுப்புகள் காணப்படுகின்றன; இவற்றில் இருக்கும் வேதிப்பொருட்கள், கல்லீரலில் ஏற்படும் சேதத்தை மெதுவாக்க உதவுவதாக பல ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.
வெண்ணெய்ப்பழங்களில் அதிகம் காணப்படும் நார்ச்சத்து, உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது; மேலும் அவகேடோ மற்றும் காளான் முதலியவற்றை சேர்த்து தயார் செய்த சாலட், கொழுப்பு கல்லீரல் கொண்டவர்களுக்கான, சிறந்த டயட் உணவாக அமைகிறது.
நன்மை 9: சிறுநீரக ஆதரவு
அவகேடோ எனும் வெண்ணெய்ப்பழம் சிறுநீரக பிரச்சனைகள், சிறுநீரகத்தில் தோன்றும் கற்கள், சிறுநீர்ப்பை கோளாறுகள் போன்றவற்றை சரி செய்ய உதவுகிறது. இவ்வெண்ணெய் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால், அது அதிக சிறுநீரை உற்பத்தி செய்து, சிறுநீர் பாதையில் காணப்படும் கற்களை கரைத்து, அடைப்பை போக்க உதவுகிறது.
நன்மை 10: கீல் வாதம்/ ஆர்த்ரிடிஸ்
அவகேடோக்கள் ஆர்த்ரிடிஸ் எனும் கீல் வாத நோயை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் காணப்படும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டவை என்று ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன; இப்பழத்தில் இருக்கும் வைட்டமின் இ அழற்சி எதிப்பு பண்புகளை கொண்டது (21). அவகேடோவில் இருக்கும் இந்த முக்கிய பண்புகள், கீல் வாத நோயை சரி செய்யும் முக்கிய உணவுகளில் ஒன்றாக அவகேடோவை திகழச் செய்கின்றன.
அவகேடோவில் வைட்டமின் இ, பொட்டாசியம், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால், அவை மூட்டு வலி ஏற்படாமல் காக்க உதவுகின்றன. இச்சத்துக்கள் குறைந்தால் தான் மூட்டு வலி ஏற்படும்; இப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால், மூட்டு வலியில் இருந்து எளிதில் நிவாரணம் பெறலாம்.
நன்மை 11: நீரிழிவு நோய்/ சர்க்கரை நோய்
அவகேடோக்களில் அதிக கலோரிகள் இருந்தாலும், அவை அனைத்தும் நார்ச்சத்து, தேவையான கொழுப்புகள் போன்ற வடிவத்தில் உள்ளன; இதில் கார்போஹைட்ரேட் சத்து குறைவாக உள்ளது. ஆகையால், இந்த பழம் சர்க்கரை நோயாளிகள் உண்ண ஏற்ற பழமாக திகழ்கிறது.
அமெரிக்க நீரிழிவு நோய் சங்கத்தின் கருத்துப்படி, நாம் உட்கொள்ளும் கொழுப்பின் அளவைக்காட்டிலும், அக்கொழுப்பு எந்த வகையை சேர்ந்தது என்பது மிகவும் முக்கியமாக கவனிக்கத்தக்கது ஆகும். இந்த சங்கம் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளை அதிகம் உண்ண பரிந்துரைக்கிறது; இக்கொழுப்புகள் அதிகம் நிறைந்த, சிறந்த உணவாக அவகேடோ திகழ்கிறது (22). இச்சங்கம் சர்க்கரை நோய் உள்ளவர்கள், தங்களது உணவு முறையில் கண்டிப்பாக அவகேடோவை சேர்த்து கொள்ளுமாறு பரிந்துரைக்கிறது(26).
அவகேடோவில் நிறைந்திருக்கும் நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன; பல ஆய்வறிக்கைகள் சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிகப்படியான நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வேகமாக குறைக்க உதவும் என்று எடுத்துரைக்கின்றன (23).
ஆய்வறிக்கைகளில் ஆயிரம் கருத்துக்கள் கூறப்பட்டாலும், நீரிழிவு நோய் உள்ளவர்கள் அவகேடோக்களை தங்களது உணவு முறையில் சேர்க்கும் முன், தங்களது மருத்துவருடன் கலந்துரையாடுமாறு கேட்டுக் கொள்கிறோம். வெண்ணெய் பழம் அதிக கலோரிகளை கொண்டுள்ளதால், இது சர்க்கரை நோயாளிகளில் எதிர்மறை விளைவுகளை கூட ஏற்படுத்தலாம்; ஆகவே மருத்துவ கலந்தாலோசிப்பு மிகவும் அவசியம்.
நன்மை 12: மேம்பட்ட அறிவுத்திறன் இயக்கம்
அவகேடோவில் இருக்கும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், அறிவாற்றல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகின்றன (24). இப்பழத்தில் இருக்கும் வைட்டமின் இ சத்தும், அறிவுத்திறன் இயக்க மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது; வயதானவர்களில் ஏற்படும் அறிவாற்றல் குறைபாட்டை சரி செய்ய, அவகேடோவில் இருக்கும் ஆன்டி ஆக்சிடென்ட் ஊட்டச்சத்துக்கள் உதவுகின்றன (25).
வைட்டமின் இ அல்சைமர் நோய்க்கு எதிரான, மிகப்பெரிய ஆன்டி ஆக்சிடென்ட் பாதுகாப்பை வழங்கும் என ஆய்வு படிப்பினைகள் தெரிவிக்கின்றன; அவகேடோக்கள் ஊட்டச்சத்துக்களின் உறைவிடமாக திகழ்வதால், இது இங்கு முக்கிய பங்கு வகிக்கிறது (26).
நன்மை 13: சுருக்கங்கள்
அவகேடோவில் காணப்படும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் (EFAs), சருமத்தின் வயதாகும் நிகழ்வை தடுத்து, உங்களை இளமையாக வைத்திருக்க உதவும். இந்த அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் – EFAs, கொழுப்பு திசுக்களின் தொகுப்பிற்கு மிக முக்கியமானவை ஆகும் (27). இவை சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகின்றன.
எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில், அவகேடோ எண்ணெயை எடுத்துக் கொள்வது, சருமத்தில் கொலாஜன் அளவை அதிகரிக்க உதவும் என்ற தகவல் வெளியாகியுள்ளது; இது அவகேடோவின் விதையில் இருக்கும் சில பிரத்யேக இயக்க காரணிகளால் ஏற்படுகின்றன (28).
அவகேடோ எண்ணெயை சரும சுருக்கங்களை போக்க பயன்படுத்துவதுடன், சருமத்தில் ஏற்படும் காயங்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது (29).
நன்மை 14: சொரியாசிஸ்
அவகேடோ எண்ணெய், சருமத்தில் ஏற்படும் சொரியாசிஸ் பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது; ஒரு ஆய்வு படிப்பினையில், வைட்டமின் பி12 சத்தினை கொண்ட அவகேடோ எண்ணெய், தோலில் உருவாகும் சொரியாசிஸ் கோளாறை விரைவில் குணப்படுத்த உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது (30).
வெண்ணெய் பழத்தில் இருக்கும் மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், அழற்சிக்கு எதிராக போராடக்கூடியவை மற்றும் இவை சொரியாசிஸை குணப்படுத்தவும் உதவலாம்.
நன்மை 15: கூந்தல் ஆரோக்கியம்
அவகேடோக்களில் இருக்கும் வைட்டமின் இ, தலை முடியை நேராக்கவும், கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது; மேலும் இந்த வைட்டமின் இ, தலைமுடியின் வளர்ச்சி கோளாறு, உச்சந்தலையில் ஏற்படக்கூடிய சேதம் போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது.
ஆய்வறிக்கை ஒன்றில், வைட்டமின் இ சத்தினை பெற்ற மக்களில் தலைமுடியின் வளர்ச்சி அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது (31). அவகேடோவை பயன்படுத்தினால் இத்தகைய பலன் நிச்சயம் விளையும் என்று உறுதியாக கூற முடியாது; ஆனால், ஒரு முறை மருத்துவ கலந்தாய்வுக்கு பின், இதனை முயற்சித்து பார்ப்பதில் தவறொன்றும் இல்லை.
அவகேடோ மாஸ்க்கை நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்; முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் அவகேடோவை கலந்து, அதில் தேவையான அளவு நீர் சேர்த்து பேஸ்ட் போன்று தயாரித்து கொள்ளவும். இதனை உச்சந்தலையில், கூந்தல் பிரச்சனை உள்ள இடத்தில் தடவி, 20 நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் வெந்நீரால் முடியை கழுவவும்.
அவகேடோக்களில் நிறைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள், அதிக நன்மைகளை அளிக்கக்கூடியவை. மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின்கள் கே மற்றும் இ ஆகிய முக்கிய ஊட்டச்சத்துக்கள் இந்த வெண்ணெய் பழத்தில் நிறைந்துள்ளன; மேலும் பல சத்துக்களும் இப்பழத்தில் அடங்கியுள்ளன.
அவகேடோ எனும் வெண்ணெய் பழத்தின் ஊட்டச்சத்து மதிப்பு – Avocado Nutritional Value in Tamil
கலோரி தகவல் | ||
---|---|---|
குறிப்பிட்ட நேரத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட அளவு | தினசரி மதிப்பு% | |
கலோரிகள் | 240 (1005 KJ) | 12% |
கார்போஹைட்ரேட் | 45.9 (192 KJ) | |
கொழுப்பு | 184 (770 KJ) | |
புரதம் | 10.1 (42.3 KJ) | |
ஆல்கஹால் | 0.0 (0.0 KJ) | |
கார்போஹைட்ரேட்டுகள் | ||
குறிப்பிட்ட நேரத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட அளவு | தினசரி மதிப்பு% | |
மொத்த கார்போஹைட்ரேட் | 12.8g | 4% |
நார்ச்சத்து உணவு | 10.1g | 40% |
ஸ்டார்ச் | 0.2g | |
சர்க்கரை | 1.0g | |
சுக்ரோஸ் | 90.0mg | |
குளுக்கோஸ் | 555mg | |
ஃப்ரக்டோஸ் | 180mg | |
லாக்டோஸ் | 0.0mg | |
மால்டோஸ் | 0.0mg | |
காலக்ட்டோஸ் | 150mg | |
கொழுப்புகள் & கொழுப்பு அமிலங்கள் | ||
குறிப்பிட்ட நேரத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட அளவு | தினசரி மதிப்பு% | |
மொத்த கொழுப்பு | 22.0g | 34% |
நிறைவுற்ற கொழுப்பு | 3.2g | 18% |
4:00 | 0.0mg | |
6:00 | 0.0mg | |
8:00 | 1.5g | |
10:00 | 0.0mg | |
12:00 | 0.0mg | |
13:00 | – | |
14:00 | 0.0mg | |
15:00 | 0.0mg | |
16:00 | 3112mg | |
17:00 | 0.0mg | |
18:00 | 73.5mg | |
19:00 | – | |
20:00 | 0.0mg | |
22:00 | 0.0mg | |
24:00:00 | 0.0mg | |
மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு | 14.7g | |
14:01 | 0.0mg | |
15:01 | 0.0mg | |
16:1 வகைப்படுத்தப்படாதது | 1047mg | |
16:1c | – | |
16:1t | – | |
17:01 | 15.0mg | |
18:1 வகைப்படுத்தப்படாதது | 13597mg | |
18:1c | – | |
18:1t | – | |
20:01 | 37.5mg | |
22:1 வகைப்படுத்தப்படாதது | 0.0mg | |
22:1c | – | |
22:1t | – | |
24:1c | – | |
பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு | 2.7g | |
16:2 வகைப்படுத்தப்படாதது | – | |
18:2 வகைப்படுத்தப்படாதது | 2511mg | |
18:2 n-6, c,c | – | |
18:2 c,t | – | |
18:2 t,c | – | |
18:2 t,t | – | |
18:2 i | – | |
18:2 t மேலும் வரையறுக்கப்படவில்லை | – | |
18:03 | 187mg | |
18:3 n-3,c,c,c | 167mg | |
18:3 n-6,c,c,c | 22.5mg | |
18:4 வகைப்படுத்தப்படாதது | 0.0mg | |
20:2 n-6,c,c,c | 0.0mg | |
20:3 வகைப்படுத்தப்படாதது | 24.0mg | |
20:3 n-3 | – | |
20:3 n-6 | – | |
20:4 வகைப்படுத்தப்படாதது | 0.0mg | |
20:4 n-3 | – | |
20:4 n-6 | – | |
20:5 n-3 | 0.0mg | |
22:02 | – | |
22:5 n-3 | 0.0mg | |
22:6 n-3 | 0.0mg | |
மொத்த ட்ரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் | – | |
மொத்த ட்ரான்ஸ் – மோனோஎனோயிக் கொழுப்பு அமிலங்கள் | – | |
மொத்த ட்ரான்ஸ் – பாலிஎனோயிக் கொழுப்பு அமிலங்கள் | – | |
மொத்த ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்கள் | 165mg | |
மொத்த ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் | 2534mg | |
புரதம் & அமினோ அமிலங்கள் | ||
குறிப்பிட்ட நேரத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட அளவு | தினசரி மதிப்பு% | |
புரதம் | 3.0g | 6% |
வைட்டமின்கள் | ||
குறிப்பிட்ட நேரத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட அளவு | தினசரி மதிப்பு% | |
வைட்டமின் ஏ | 2191U | 4% |
வைட்டமின் சி | 15.0mg | 25% |
வைட்டமின் டி | – | – |
வைட்டமின் இ (ஆல்ஃபா டோகோஃபெரல்) | 3.1mg | 16% |
வைட்டமின் கே | 31.5mcg | 39% |
தையமின் | 0.1mg | 7% |
ரிபோஃபிளவின் | 0.2mg | 11% |
நியாசின் | 2.6mg | 13% |
வைட்டமின் பி6 | 0.4mg | 19% |
ஃபோலேட் | 122mcg | 30% |
வைட்டமின் பி12 | 0.0mcg | 0% |
பான்டோதெனிக் அமிலம் | 2.1mg | 21% |
சோலைன் | 21.3mg | |
பேடைன் | 1.1mg | |
தாதுக்கள் | ||
குறிப்பிட்ட நேரத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட அளவு | தினசரி மதிப்பு% | |
கால்சியம் | 18.0mg | 2% |
இரும்பு | 0.8mg | 5% |
மக்னீசியம் | 43.5mg | 11% |
பாஸ்பரஸ் | 78.0mg | 8% |
பொட்டாசியம் | 727mg | 21% |
சோடியம் | 10.5mg | 0% |
ஜிங்க்/ துத்தநாகம் | 1.0mg | 6% |
காப்பர்/ தாமிரம் | 0.3mg | 14% |
மாங்கனீசு | 0.2mg | 11% |
செலினியம் | 0.6mcg | 1% |
ஃபுளூரைடு | 10.5mcg |
ஒரு பாதி அவகேடோவில் (68 கி) 113 கலோரிகள் நிறைந்துள்ளன; இதில் 14 மில்லி கிராம் வைட்டமின் கே (தினசரி மதிப்பில் 19%), 60 மில்லி கிராம் ஃபோலேட் (தினசரி மதிப்பில் 15%), 12 மில்லி கிராம் வைட்டமின் சி (தினசரி மதிப்பில் 12%), 342 மில்லி கிராம் பொட்டாசியம் (தினசரி மதிப்பில் 10%), மற்றும் 0.4 மில்லி கிராம் வைட்டமின் பி6 (தினசரி மதிப்பில் 9%).
அவகேடோவில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது அல்லவா! அவகேடோக்களை நமது உணவு முறையில் சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்; இதனால் அதிக நன்மைகள் விளையும். ஆனால் எப்படி இதனை உணவில் சேர்த்துக்கொள்வது என்ற குழப்பமா? கீழே படியுங்கள்!
அவகேடோ எனும் வெண்ணெய் பழத்தினை பயன்படுத்துவது எப்படி?- How to Use Avocado in Tamil
அவகேடோக்களை பல வழிகளில் பயன்படுத்தலாம்; வெண்ணெய் பழங்களை டோஸ்ட், சாலட், ஸ்மூத்தி பானங்கள் என எந்த வடிவிலும் உட்கொள்ளலாம். இப்பழங்களை பயன்படுத்தி சூப், இனிப்புகள் தயாரிக்கலாம் அல்லது உப்பு மற்றும் மிளகை தூவி அப்படியே கூட உட்கொள்ளலாம்.
அவகேடோக்களை பின்வரும் வழிகளில் கூட உட்கொள்ளலாம்:
- பொரித்த முட்டையுடன் அவகேடோக்களை சேர்த்து, காலை உணவாக உட்கொள்ளலாம்
- முட்டை, சிக்கன், டூனா சாலட்கள் தயாரிக்க பயன்படுத்தும் மயோனைஸுக்கு பதிலாக அவகேடோக்களை பயன்படுத்தலாம்
- அவகேடோக்களை கிரில் செய்து, பார்பிகியூ இறைச்சிகளுக்கு பக்க உணவாக வைத்து உட்கொண்டால், அருமையாக இருக்கும்
- சாலட்கள் அல்லது சாண்ட்விச்களுடன் சேர்த்து உண்ண அவகேடோக்களை கொண்டு ஊறுகாய் தயாரிக்க, அவகேடோக்களை பயன்படுத்தலாம்
- அவகேடோக்களை ஆழ வறுத்து, அவகேடோ வறுவல்களை கடுகு அல்லது கெட்சப் சாஸ்களுடன் சேர்த்து உண்ணலாம்
- அவகேடோ, பால், எலுமிச்சை சாறு, கிரீம், சர்க்கரை முதலியவற்றை சேர்த்து, அவகேடோ ஐஸ்கிரீம் தயாரித்து உண்ணலாம்
- காலை உணவாக உட்கொள்ளக்கூடிய பான் கேக்குகளுடன் அவகேடோக்களை சேர்த்து உண்ணலாம்
இந்த வழிமுறைகள் மிகவும் விசித்திரமாகவும், தித்திப்பு ஊட்டக்கூடியதாகவும் உள்ளன அல்லவா! ஆனால், இந்த வழிமுறைகளை பின்பற்றும் முன்னர் அவகேடோக்களை பற்றி நீங்கள் முழுமையாக அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்; அவகேடோக்களை பற்றிய கூடுதல் தகவல்களை கீழே படித்தறியுங்கள்.
அவகேடோ எனும் வெண்ணெய் பழத்தின் பக்க விளைவுகள் – Side Effects of Avocado in Tamil
அவகேடோக்களால் ஏற்படும் நன்மைகள் பல இருப்பினும், இதனால் ஒரு சில பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புண்டு. அப்படி வெண்ணெய் பழங்களால் ஏற்படும் ஒரு சில பக்க விளைவுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
- உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தலாம்
அவகேடோக்கள் அதிக கொழுப்புச்சத்தை கொண்டவை; அதிகளவு அவகேடோக்களை உண்பது, உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தலாம். ஆகையால், வெண்ணெய் பழங்களை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது.
- இரப்பர் மரப்பால் ஒவ்வாமை
இரப்பர் மரப்பால் தொடர்பான ஒவ்வாமை கொண்ட நபர்களுக்கு, அவகேடோக்களாலும் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு; ஆகையால், இத்தகைய ஒவ்வாமை கொண்ட நபர்கள் வெண்ணெய் பழங்களை தவிர்ப்பது நல்லது.
அவகேடோக்களினால் ஏற்படக்கூடிய நன்மைகளை பற்றியும், அதன் பக்க விளைவுகளை பற்றியும் தெளிவாக படித்து அறிந்தோம். இதன் பின் மருத்துவ ஆலோசனை கொண்ட பிறகு, வெண்ணெய் பழத்தினை உங்கள் உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். இப்பழத்தில் நிறைந்திருக்கும் அற்புதமான, சக்தி வாய்ந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்கவல்லது.
நீங்கள் இப்பதிப்பை படிக்கும் முன் அவகேடோக்களை பயன்படுத்தி உள்ளீரா? அவகேடோக்களை உங்களுக்கு பிடித்ததா? என்பது போன்ற விவரங்களை எங்களுடன் கமெண்ட் பாக்ஸ் வாயிலாக பகிர்ந்து கொள்ளுங்கள்!
Community Experiences
Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.