பஞ்ச தந்திரக் கதைகள்
மனதை வியக்க வைத்த நெறிகள் மற்றும் அறிவைக் கொடுக்கும் பழமையான கதைகள்!

Image: Shutterstock
குழந்தைகளுக்கானகதைசொல்லிகள்என்பதுஇப்போதையகாலகட்டத்தில்அருகிவருகிறது.

நாம்வளர்ந்தாலும்நமதுஇளம்பிராயத்தில்ஏற்பட்டகதைகேட்கும்தாகம்இன்னமும்குறையவேஇல்லை.
இதனையேநாம்இன்றளவும்சினிமாக்களில்கண்டுஇன்புறுகிறோம்.
கதைகேட்கும்ஆர்வத்தின்அடுத்ததொருபரிணாமம்திரைப்படங்கள்எனலாம்.
இவ்வளவுவளர்ந்தபின்பும்நாம்இன்னும்கதைகளைஏதோஒருவடிவத்தில்நேசித்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால்இன்றையஇளம்பிராயகுழந்தைகளுக்குகதைசொல்தல்என்றால்என்னஎன்பதுபள்ளியின்ஒருவகுப்போடுமுடிந்துவிடுகிறது.
அவர்களேவிரும்பினாலும்கதைசொல்லும்திறமைபெற்றபெரியவர்கள்இல்லாமல்இருப்பதுமிகப்பெரியவளர்த்தல்குறைபாடுஎனலாம்.
ஆகவேஇங்கேகூறப்பட்டிருக்கும்நீதிக்கதைகளைஉங்கள்குழந்தைகளுக்குசுவாரஸ்யமானமுறையில்நீங்கள்சொல்லஆரம்பியுங்கள். அவர்களின்மழலைஉலகில்இருந்தேஅவர்கள்மனதில்அறம்வளருங்கள்!
பஞ்ச தந்திரக்கதைகள் எப்படி உருவானது
பஞ்சதந்திரக்கதைகள்உருவானது இன்னொரு சுவாரஸ்யமான தனிக்கதையாக கூறப்படுகிறது. ஒருவேளை பஞ்ச தந்திரக்கதைகளின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கூட இது சொல்லப்பட்டிருக்கலாம்.
செல்வத்துக்குகுறைவில்லாதபாடலிபுரநாட்டுமன்னனுக்குபிறந்தபிள்ளைகள்அனைவருமேமக்காகவும்அறிவில்லாதமூடர்களாகவும்இருந்ததால்மன்னன்கவலைகொண்டான்.
இப்படியானபிள்ளைகள்பிறக்காமல்இருப்பதேமேல்எனஎண்ணமும்கொண்டான்.
தன்னுடையகவலையைஅரசவையில்தெரிவித்தான்.
அங்கேஅனைத்துநீதிசாஸ்திரங்களிலும்வென்றசோமசர்மாஎன்பவர்எழுந்துஉங்கள்பிள்ளைகளைநான்ஆறுமாதத்துக்குள்அறிவிற்சிறந்தவர்களாகஆக்கிகாட்டுகிறேன்என்றார்.
மன்னன்தன்னுடையகவலைகள்நீங்கிசோமசர்மாவுக்குஉண்டானமரியாதைகள்செய்வித்துமகன்களைஅவருடன்அனுப்பிவைத்தார். சோமசர்மாதான்கற்றஅத்தனைநீதிசாஸ்திரங்களையும்கரைத்துகரும்புக்கட்டியாக்கி அச்சு வெல்லம் போல பஞ்சதந்திரக்கதைகளை மாற்றினார். அவைகளைஅரசகுமாரர்களுக்குசொல்லலானார்.
குழந்தைகளேஉங்களுக்குசிலவேடிக்கைகதைகளைகூறபோகிறேன்.
பஞ்சதந்திரக்கதைகள்என்றுஅதற்குபெயர்சூட்டிஇருக்கிறேன்என்றார்.
குழந்தைகள்பஞ்சதந்திரக்கதைகள்என்றால்என்னஎன்றுகேட்டன.
சோமசர்மாஅரசகுழந்தைகளுக்குதேவையானஐந்துவிதநீதிகளைஉள்ளடக்கியகதைகள்செய்திருந்தார். அவையாவனமித்ரபேதம்நட்பைகெடுத்துபகைஉண்டாக்கும்கதைகள், சுகிர்லாபம்எனப்படும்தனக்குசமமானவர்களோடுசுமுகமாகவாழ்தல், சந்திவிக்ரகம்என்பதுபகைவர்களோடுஉறவாடிவெல்தல், அர்த்தநாசம்என்றால்கையில்கிடைத்தபொருள்களைஅழித்தல், அசம்பிரேட்சியகாரியத்துவம்என்பதுஒருவிஷயத்தைஆராயாமல்செய்தல்என்பனவாகும்.
குழந்தைகள்கதைகள்கேட்கஆர்வம்கொண்டார்கள். சோமசர்மாபின்வரும்கதைகளைக்கூறலானார்.
1. காகமும் நாகமும்
ஒருஊரில்ஒருகாக்கைதம்பதியினர்மிகுந்தகாதலோடுவாழ்ந்துவந்தனர். அவர்கள்காதலால்பலமுட்டைகள்இட்டுஅதனைபாதுகாத்துவந்தனர். அப்போதுஅந்தகாகங்கள்வாழும்மரத்தின்கீழ்உள்ளபொந்தில்உள்ளகருநாகம்காக்கைகள்இடும்முட்டைகளைகாகங்கள்அறியாமல்எடுத்துதன்னுடையபசியைஆற்றிகொண்டிருந்தது.
இதனால்மனம்வருந்தியகாகம்அங்குவந்தநரியிடம்இதுபற்றிகூறிபுலம்பியது.
நாகத்தின்பசியில்இருந்துகாகத்தின்முட்டைகளைதப்பிக்கவைக்கநரிஒருஉபாயம்கூறியது.
மறுநாள்விடியல்பொழுதில்அரண்மனைக்குள்பறந்ததுகாகம். அங்கேராணிதன்னுடையஆபரணங்களை கழற்றி வைத்து விட்டு குளித்து கொண்டிருந்தாள். அழகான முத்துக்கள் பதித்த ஆபரணம் ஒன்றை தனது அலகால் கவ்விய காகம் அதை தூக்கி கொண்டு பறந்தது. ராணி அலறி வீரர்களை அழைத்து காகத்தை பின் தொடர சொன்னாள் .காகம் அந்த நகையினை நாகம் இருந்த பொந்தில் கொண்டு வந்து போட்டுவிட்டு வேறொரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டது.
வீரர்கள்மாலையைஎடுக்கபொந்திற்குள்கைவிட்டபோதுஅங்கிருந்தகருநாகம்சீறியது. நாகத்தைகண்டவீரர்கள்அதனைதங்கள்வாளால்வெட்டிகொன்றனர். அதன்பின்னர்ராணியின்முத்துமாலையைஎடுத்துசென்றுராணியிடம்ஒப்படைத்தனர்.
நரியின்யோசனைப்படிசெய்தகாகம்நாகத்தின்தொல்லையில்இருந்துவிடுபட்டுதன்னுடையமனைவிகுழந்தைகளுடன்பல்லாண்டுகாலம்நிம்மதியாகவாழ்ந்தது.
நீதி : அடுத்தவருக்குகெடுதல்செய்யநினைப்பவருக்குஅதைபோலபலமடங்குகெடுதல்திரும்பஅவர்களைவந்துசேரும்.
2. நன்றி மறந்த சிங்கம்
வேடர்கள்சிலர்ஆட்டைபணயமாகவைத்துசிங்கத்தைபிடிக்ககூண்டுஒன்றுவைத்தனர். ஆட்டிற்குஆசைப்பட்டசிங்கம்ஒன்றுகூண்டுக்குள்மாட்டிக்கொண்டது.
அப்போதுஅந்தவழியாகவந்தமனிதனிடம்தன்னைவிடுவிக்குமாறு சிங்கம்கெஞ்சிகேட்டது. மனிதன்மறுத்தான். சிங்கம்தன்னைகொன்றுவிடலாம்எனயோசித்தான். அப்போதுசிங்கம்நயமாகபேசியது. என்னைநீகாப்பாற்றினால்நான்உனக்குநன்றிக்கடன்பட்டவன். உன்னைநான்எப்படிகொலைசெய்யமுடியும்என்றது.
நம்பியமனிதன்கூண்டைதிறந்தான். சிங்கம்தன்னுடையநன்றியைமறந்தது மனிதன் மீது பாய்ந்தது. மனிதனுக்கும் சிங்கத்துக்கு போராட்டம் நடந்தது. மனிதன் சிங்கத்திடம் இது நியாயமா எனக் கேட்டான். சிங்கமோ உனக்கு இருக்கும் ஆறாவது அறிவை பயன்படுத்தாதது என்னுடைய குற்றமல்ல. நீ யோசித்திருக்க வேண்டும் என்று அகங்காரத்துடன் கூறியது.
அந்த வழியே வந்த நரியை இந்த பஞ்சாயத்துக்கு முடிவு சொல்ல கூப்பிட்டார்கள்,
நரிக்குசிங்கத்தின்நன்றிகெட்டகுணம்புரிந்திருந்தது. இருந்தாலும்சிங்கத்திடம்என்னநடந்ததுஎன்பதைவிளக்கமாககூறும்படிபணிவுடன்கேட்டுகொண்டது.
சிங்கம்கம்பீரத்துடன்”நான்அந்தகூண்டிற்குள்அடைபட்டிருந்தேன்” என்றுஆரம்பித்தது.
உடனேநரி” எந்தக்கூண்டு” எனக்கேட்டது.
“அதோஅந்தகூண்டுதான்” என்றதுசிங்கம்
“அந்தக்கூண்டா? அதற்குள்எப்படிஅடைந்துகிடந்தீர்கள்” என்றுகேட்டதுநரி.
எதுவும்புரியாமல்கேட்கும்நரிமீதுசிங்கத்திற்குகோபம்வந்தது.
“ஏய்முட்டாள்நரியே! இப்படித்தான்அடைந்துகிடந்தேன்போதுமா?” எனகூண்டிற்குள்சென்றதுசிங்கம்.
இந்தசமயத்திற்காகவேகாத்திருந்தநரிபட்டென்றுகூண்டைஇழுத்துமூடிபூட்டியது
சிங்கம்இதனைஎதிர்பார்க்கவில்லை. நியாயம்சொல்லவந்தநீயேஇப்படிசெய்யலாமாஎனப்பரிதாபமாககேட்டது
நரியோ.. நான்ஒன்றும்மனிதன்அல்ல. உங்களைநம்பிக்கதவைதிறக்க. உங்களுக்குஉதவிசெய்தமனிதனைஅடித்துக்கொல்லநினைத்தநீங்கள்என்னைமட்டும்உயிரோடுவிடுவீர்களாஎன்ன? அதனால்நீங்கள்அங்கேயேஇருங்கள்என்றபடிநரிதன்னுடையவழியில்சென்றது.மனிதன்உயிர்தப்பியதுதம்பிரான்புண்ணியம்எனஓடிவிட்டான்.
நன்றிகெட்டசிங்கம்மீண்டும்கூண்டில்பசியோடுவாடதொடங்கியது.
நீதி : ஒருவர்செய்தஉதவியைஎப்போதும்மறக்கக்கூடாது.
3. வாழ்வு தந்த முதிய வாத்து
ஊருக்குவெளியேஅடர்ந்தகாடுஒன்றுஇருந்தது. அங்கிருந்தஆலமரத்தின்கிளைகளில் ஒருவாத்துக்கூட்டம்வசித்துவந்தது. அந்தஆலமரத்தின்அடியில்புதிதாகஒருகொடிமுளைத்தது. அதுஅந்தமரத்தைசுற்றிப்படரஆரம்பித்தது.
இதனைப்பார்த்தவயதானவாத்துஒன்றுமற்றவாத்துக்களைஎச்சரித்தது.
இந்தக்கொடிமரத்தைசுற்றிப்படர்ந்தால்நமக்குகண்டிப்பாகஆபத்துஏற்படும். யாராவதுஇதனைப்பிடித்துக்கொண்டுமரத்தில்ஏறிவந்துநம்மைகொல்லமுடியும்என்றுமுதியவாத்துஎச்சரித்தது
இப்போதேஇந்தக்கொடியைவேரோடுபிடுங்கிஎறிந்துவிடுங்கள்என்றுமுதியவாத்துயோசனைசொன்னது.
ஆனால்மற்றவாத்துக்கள்எல்லாம்அந்தவயதானவாத்தின்பேச்சைமதிக்கவில்லை. இதுஎன்னவேலையில்லாதவேலைஎன்று அதைப் பற்றி அலட்சியமாக பேசி விட்டு கொடியை நீக்காமல் விட்டு விட்டன. அந்தக் கொடி நாளுக்கு நாள் வளர்ந்து பெரிதாக மரத்தை சுற்றி படர்ந்தது.
ஒரு நாள் எல்லா வாத்துகளும் இரை தேட சென்றிருந்தன. அந்த வழியே வந்த வேடன் ஒருவன் வாத்துக்களை பிடித்துக் கொண்டு போக நினைத்தான். மரத்தை சுற்றி படர்ந்திருந்த கொடியினை பிடித்து மரத்தின் மேல் ஏறி வாத்துக்களை பிடிக்க கண்ணி வைத்தான்.
அதன் பின்னர் அங்கிருந்து நகர்ந்து விட்டான். வெளியே சென்ற வாத்துக்கள் எல்லாம் இரை உண்டு விளையாடியபடி வீடு திரும்பின. வேடன் வைத்த கண்ணியில் அவை சிக்கி கொண்டன.
உடனே முதிய வாத்து என்னுடைய பேச்சை உடனே கேட்காததால் தான் இப்படி மாட்டிக் கொண்டோம். இனி அனைவரும் சாக வேண்டியதுதான் என்று கூறியது.
மற்ற வாத்துகள் தங்கள் தவறுக்காக வருந்தின. பெரியவரே நீங்கள் சொல்வதை கேட்காமல் போனது தவறுதான். இந்த ஆபத்து நேரத்திலும் நீங்களே எங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று முதிய வாத்தை பார்த்து கெஞ்சின.
அறிவும் பக்குவமும் கொண்ட முதிர்ந்த வாத்து தன்னுடைய இனம் அழிந்து போகாமல் இருக்க வேண்டும் என்று நினைத்தது . மேலும் இளைய வாத்துக்கள் மீது இரக்கம் கொண்டு
சரி நான் சொல்லும்படி செய்யுங்கள். வேடன் வரும் போது அனைவரும் செத்தது போல நடியுங்கள்.செத்த பிணம் தானே என்று வேடன் கவனமில்லாமல் இருக்கும்போது அனைவரும் தப்பித்து விடலாம் என்று உபாயம் கூறியது .
அடுத்த நாள் அதிகாலையில் வேடன் அங்கே வந்தான். அவன் தலையை பார்த்ததும் வாத்துக்கள் எல்லாம் செத்தது போல சாய்ந்து விட்டன.
மரத்தின் மீது ஏறிய வேடன் உண்மையில் வாத்துக்கள் இறந்து விட்டது எனக் கருதினான். அதனால் அவைகளை மரத்தில் இருந்து தூக்கி கீழே வீசினான்.
உயிருள்ள வாத்துக்கள் என்றால் வேடன் கால்களையும் இறக்கைகளையும் கட்டி அவைகளை இறக்கி இருப்பான். செத்த வாத்துக்கள் தானே என்று எண்ணிய வேடன் வாத்துக்களை கட்டாமல் அப்படியே தரையில் போட்டான்.
வாத்துக்கள் ஒவ்வொன்றாக கீழே விழுந்தும் வலியை பொறுத்துக்கொண்டு கீழே விழுந்தும் இறந்தது போலவே கிடந்தன. எல்லா வாத்துக்களையும் வேடன் தரையில் போட்டு விட்டு கீழே இறங்கலானான். அவன் பாதி வழி இறங்கும்போது முதிய வாத்து கண்காட்டியதும் எல்லா வாத்துக்களும் படபட வென இறக்கைகளை அடித்துக்கொண்டு மரத்தின் மீது அமர்ந்து கொண்டன.ஏமாந்து போன வேடன் வீடு நோக்கி நடந்தான்.
நீதி : முதியவர்களுக்கு என ஒரு பக்குவமும் அறிவும் இருக்கும்.அனுபவமும் நல்லறிவும் நல்ல எண்ணமும் கொண்ட முதியவர்கள் பேச்சை மதித்து நடக்க வேண்டும்.
4. ஒட்டகத்தை கொன்ற சிங்கம
காடுகளின் ராஜாவான சிங்கத்திற்கு காகம், நரி , புலி போன்றவை அமைச்சர்களாக இருந்து வந்தது. ஒருமுறை ஒட்டகம் ஒன்று வழிதவறி அந்தக் காட்டிற்குள் வந்து விட்டது. மற்ற அமைச்சர்கள் ஒட்டகத்தை சிங்கத்திடம் கொண்டு போய் விட்டன. சிங்கம் வழி தவறிய ஒட்டகத்திற்கு அடைக்கலம் கொடுத்து அதனையும் தன்னுடைய அமைச்சரவையில் இணைத்து கொண்டது.
பல நாட்கள் எல்லாம் ஒன்றாக ஒற்றுமையுடன் கிடைத்த உணவை பகிர்ந்து உண்டு வாழ்ந்தன . ஒரு முறை சிங்கம் நோய்வாய்ப்பட்டது. தன்னுடைய அமைச்சர்களிடம் என் பசியைத் தீர்க்க ஏதாவது உணவு கொண்டு வாருங்கள் என்று கூறியது.
அமைச்சர்கள் நால்வரும் காடெங்கும் தேடி அலைந்தும் ஒரு இரையும் அகப்படவில்லை. ஆகவே நான்கும் வெறும் கையுடன் திரும்பி வந்தன.
இன்னும் சில நாட்கள் போனால் சிங்கத்தின் பசிக்கு தாங்கள் இரையாகி விடலாம் என்கிற கவலை மற்ற மிருகங்களுக்கு இருந்தது. ஆகவே காகம் ஒரு யோசனை தந்தது. ஒட்டகத்திற்கு தெரியாமல் தன்னுடைய பழைய சகாக்கள் ஆன புலி மற்றும் நரியை அழைத்துக் கொண்டு சிங்கத்திடம் சென்றது.
மன்னரே காடு முழுதும் நாங்கள் அலைந்து திரிந்தும் உங்களுக்கான இரை கிடைக்கவில்லை என்று பணிவுடன் காகம் கூறியது.
அப்படி என்றால் என் பசிக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள். உங்கள் கருத்துதான் என்ன என்று சிங்க ராஜா வினவியது.
மன்னரே தங்களுடைய பசி போக்கும் ஒரே மருந்து ஒட்டகம் மட்டுமே என்று காகம் கூறியது.
சிவசிவ என்று சிங்கம் தன்னுடைய காதுகளை மூடிக் கொண்டது.
உடனே காகம்
ஒரு குடியைக் காக்க ஒரு மனிதனைக் கொல்லலாம் . ஒரு நகரைக் காப்பாற்ற ஒரு குடியைக் கெடுக்கலாம். ஒரு ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு நகரையே அழிக்கலாம். இந்த நீதியை வைத்துதான் பஞ்சபாண்டவர்கள் தங்கள் மகன் அரவானை போர்க்களத்தில் பலியிட்டு வெற்றி பெற்றனர் என்று நயமாக பேசியது.
நீ என்ன சொன்னாலும் அடைக்கலமாக வந்தவர்களை உணவாக்கி கொள்வது பாவம் என்று சிங்கம் மீண்டும் மறுத்தது
உடனே காகம் சரி அரசே அடைக்கலமாக வந்தவர்களை நீங்கள் கொல்ல வேண்டாம். ஒட்டகத்தின் ஒப்புதலின் பேரிலேயே அது உங்களுக்கு உணவானால் நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்று கூறியது.இதற்கு சிங்கம் மறுமொழி ஏதும் சொல்லவில்லை.
சிங்கத்தின் மௌனத்தையே சம்மதமாக எடுத்துக் கொண்ட காகம் நரி மற்றும் புலியை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து சென்றது.
ஒட்டகம் தனியாக திரும்பி வந்து சேர்ந்தது. உடனே நரி புலி மற்றும் காகம் ஆகிய மூன்றும் சிங்கத்தை பார்த்து மன்னரே உங்களுக்கான உணவு எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்னை உண்டு உங்கள் பசியைப் போக்கி கொள்ளுங்கள் என்று காகம் கூறியது.
உன் உடல் எனக்கொரு உணவாக முடியுமா என்று சிங்கம் கேட்டது.
உடனே நரி முன் வந்து என்னை உங்கள் உணவாக்கி கொள்ளுங்கள் என்றது
சிங்கம் உன் உடலாலும் என் பசி அடங்காதே என்றது
இப்போது புலி சொன்னது மன்னரே என்னை நீங்கள் உண்ணலாம் என்று அனுமதி கொடுத்தது.
நீயும் எனது பசிக்கு போதுமானவன் அல்லவே என்று சிங்கம் மறுத்து சொன்னது.
இதைப் பார்த்த ஒட்டகத்திற்கு தன்னைக் கொல்லத்தான் இந்த சூழ்ச்சி நாடகம் எனப் புரிந்து போனது. ஆனாலும் அடைக்கலமாக வந்த அதற்கு வேறு வழியில்லை. ஆகவே நான் மிகுந்த தசைகளைக் கொண்டிருக்கிறேன். என்னை உண்ணுங்கள் என்று கூறியது.
ஒட்டகம் சொல்லி முடிப்பதற்குள் சிங்கம் என்ன பதில் சொல்லப் போகிறது என்பது தெரிவதற்குள் புலி பாய்ந்து ஒட்டகத்தினை அடித்துக் கொன்றது.சிங்கம் இறந்து போன ஒட்டகத்தின் ரத்தத்தை குடித்தது. புலி அதன் மூளையைத் தின்றது.நரி ஒட்டகத்தின் ஈரலைக் கடித்து தின்று மகிழ்ந்தது. காகமோ ஒட்டகத்தின் தசைகளை கொத்தி உண்டு பசியாறியது.
நீதி: கொடியவர்களுடன் கூடியவர்கள் மடிவது உறுதியானது. நல்லவர்கள் அல்லாதவர்களோடு சேரக் கூடாது.
5. சமுத்திரத்தை ஜெயித்த சிட்டுக்குருவி
ஒரு ஆண் சிட்டு கடற்கரையோரமாக வாழ்ந்து வந்தது. அதற்கொரு மனைவி சிட்டும் இருந்தது.ஒரு செடியின் கீழே கூடு அமைத்து சிட்டுக்கள் வாழ்ந்தன. பெண் சிட்டுக்குருவி சினையானது . உடனே ஆண் சிட்டுக்குருவியை பார்த்து
நான் எங்கே முட்டையிடுவது என்று கேட்டது.
எங்கே இட முடியும்? கடற்கரையை விட்டால் நமக்கு வேறு கதி இருக்கிறதா.. இங்கேதான் இட வேண்டும் என்று பதில் சொன்னது ஆண் சிட்டு குருவி
கடற்கரையில் முட்டையிட்டு அவைகளை அலை அடித்து சென்று விட்டால் நாம் என்ன செய்வது எனக் கலங்கியது பெண் சிட்டு குருவி
நாம் இன்னார் எனத் தெரிந்த பிறகும் அந்தக் கடல் நமது முட்டைகளை கொண்டு செல்லுமானால் அது நாய் படாத பாடு படும் என்று மனைவியிடம் அகங்காரம் பேசியது ஆண் குருவி
நீங்கள் பேசுவது அறிவுடையது போல தோன்றவில்லை. வாயடக்கம் இல்லாத ஆமை இறந்த கதை உங்களுக்கு மறந்து போனதா என ஆமையின் கதையையும் கூடவே மூன்று மீன்களின் கதையையும் எடுத்துக் கூறியது மனைவி.
அதெல்லாம் கிடக்கட்டும். நமக்கு உரிமையான இடம் இதுதான். இங்கேயே நீ முட்டையிடு என்று வலுக்கட்டாயமாக சொன்னது ஆண் சிட்டு
இதனைக் கேட்டு கொண்டிருந்த கடலரசன் ஓஹோ இவர்கள் சமர்த்தை நாம் பார்க்கலாம் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டது. எப்படி இவர்கள் முட்டையை காப்பற்றுவார்கள் என்று பார்க்கலாம் என பெண் குருவி இட்டு வைத்த முட்டைகளை கடல் அரசன் அலைகள் மூலம் உள்ளிழுத்துக் கொண்டான்.
இதைக் கண்ட அந்த சிறு ஆண் சிட்டு குருவி கடலைப் பார்த்து, ஏ கடலே எங்கள் முட்டைகளைத் திருப்பிக் கொடுத்து விடு. இல்லையென்றால் நீ மிகவும் சிரமப்பட போகிறாய் என்றது.
கடல் ஏதும் பேசாமல் அமைதியாகக் கிடந்தது.
உடனே சிட்டுக்குருவி தன்னுடைய இனத்தாரை எல்லாம் ஒன்று திரட்டியது . சிட்டுக்குருவிகள் எல்லாம் ஒன்று கூடிய பின்னர் அவைகளை அழைத்துக் கொண்டு கருட ராஜாவிடம் பறந்து சென்றது.
கருடனிடம் சென்ற சிட்டுக்குருவி,
பறவைகளின் ராஜாவே..
பறவைக்குலத்துக்கே பெரும் பழி நேர்ந்து விட்டது. கடலரசன் எங்கள் முட்டைகளை எடுத்துக் கொண்டு போய் விட்டான். அவைகளைத் திரும்ப பெறாவிட்டால் யாரும் நம் பறவைக்குலத்தை மதிக்க மாட்டார்கள் என்று கூறியது.
உடனே கருடன் திருமாலிடம் பறந்து சென்றது. தகவல் அறிந்த திருமால் கடலரசனை அழைத்தார். ஏன் சிட்டுக்குருவியின் முட்டைகளை எடுத்தாய் உடனடியாக திருப்பி கொடுக்காவிட்டால் என் கோபத்துக்கு ஆளாவாய் என்று எச்சரித்தார்..
கடவுளின் கட்டளை கேட்டதும் கடலரசன் நடுங்கினான். சிட்டுக்குருவியின் முட்டைகளை கொண்டு வந்து அவர்களிடமே கொடுத்து விட்டான்.
நீதி : கூட்டு முயற்சி எப்போதும் வெற்றியைத் தரும்.
6. வாயடக்கம் இல்லாத ஆமை
இரண்டு அன்னப்பறவையும் ஒரு ஆமையும் நெடுங்காலமாக ஒரே குளத்திற்குள் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. இணை பிரியாத நட்புடன் இருந்து வந்த அன்னப்பறவைகளையும் ஆமையையும் வறண்டு போன வானிலை சோதனை செய்தது.
மழையில்லாமல் குளம் வற்றியது. அன்னப்பறவைகள் பறந்து சென்று விடும். ஆனால் ஆமை ஊர்ந்து ஊர்ந்து அடுத்த குளத்தை கண்டுபிடிப்பதற்குள் அதன் உயிருக்கே ஆபத்து நேரலாம்.
நண்பனை பிரிய விரும்பாத அன்னப்பறவைகள் ஒரு யோசனை செய்தன. நீண்ட கழி ஒன்றின் ஒரு முனையை ஒரு அன்னப்பறவையும் மறுமுனையை மற்றொரு அன்னப்பறவையும் கவ்வி கொள்ள வேண்டும் என்றும் ஆமைகழியின் நடுப்பகுதியை தன்னுடைய வாயால் கவ்விக் கொள்ள வேண்டும். இப்படியாக மூவருமே அடுத்த குளத்தை விரைவாக அடைந்து விடலாம் என திட்டம் போட்டனர். ஆமைக்கு ஒரு நிபந்தனையும் வைத்தனர். என்ன நடந்தாலும் வாயைத் திறக்கக் கூடாது என்பதே அது. ஆமையும் ஒப்புக் கொண்டது.
வானத்தில் ஆமை பறப்பதை கண்ட ஊர்க்காரர்களுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. கை தட்டி சிரித்து ஆராவாரம் செய்தனர். இதனைக் கேட்டு கொண்டிருந்த ஆமைக்கு ஆர்வம் தாங்கவில்லை.
எதற்காக சிரிக்கிறார்கள் என கேட்க தன்னுடைய வாயைத் திறந்தது. அதனால் உயரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தது.
நீதி : சூழ்நிலை அறிந்து எப்போது பேச வேண்டுமோ அப்போது மட்டுமே வாய் திறக்க வேண்டும்.
7. நான்கு நண்பர்கள்
அறம் பற்றி உங்கள் குழந்தைகளுக்கு எடுத்துரைக்க இதனை விட அருமையான கதை இருக்க முடியாது. ஏகப்பட்ட வாழ்க்கை தத்துவங்கள் இக்கதையில் இருக்கின்றன. கூர்ந்து படித்து குழந்தைகளுக்கு சொல்லுங்கள். நல்வழியில் நடத்துங்கள்.
கோதாவரி ஆற்றின் கரையின் அருகில் ஒரு அடர்ந்த வனம் இருந்தது.அங்கிருந்த இலவம் மரத்தில் ஒரு காகம் வாழ்ந்து வந்தது. தன்னுடைய இனத்திற்கு மீறிய ஒரு அறிவு அந்த காகத்திற்கு எப்போதும் இருந்தது.
ஒரு நாள் காகம் தன்னுடைய இனத்தாருடன் குளித்து விட்டு தன்னுடைய சிறகுகளை உலர்த்தி கொண்டிருந்தது. அப்போது கொடிய வேடன் ஒருவன் வலை மற்றும் வில் அம்புகளாடு அங்கே வந்தான். அதனால் அனைத்து காகங்களும் பதறியடித்து பறந்தன. ஆனால் இந்த காகம் மற்றும் ஒரு மரத்தில் ஒளிந்து கொண்டு வேடன் என்ன செய்கிறான் என்பதை கண்காணித்தது.
அந்த வேடன் வலையை விரித்து அதனை சுற்றி தீனியும் போட்டான். மறைவான இடத்தில் இருந்து ஏதேனும் பறவைகள் அகப்படுகிறதா என்றும் பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்போது புறாக்கள் கூட்டம் அருகில் இருந்த மரத்தில் இறங்கியது. புறாக்களுக்கோ தானியங்களை பார்த்ததும் சந்தோஷம் வந்தது. ஆனால் அதில் இருந்த புறாக்களின் அரசன் அது ஏதேனும் சதியாக இருக்கலாம் என சக புறாக்களை எச்சரித்தது.
காட்டில் தானாக தானியம் கிடந்தால் அது யாரேனும் கொண்டு வந்து போட்டதாக இருக்கும். ஆகவே உண்ண வேண்டாம் என எச்சரித்தது.
மற்ற புறாக்களோ ஒவ்வொன்றுக்கும் இப்படி யோசித்து கொண்டிருந்தால் நாம் இரையே உண்ணாமல் இறக்க வேண்டியது தான்.எந்தெந்த காலத்தில் என்னென்ன நடக்கவேண்டுமோ அது அப்படியே நடக்கும் என்று சொல்லி தானியங்களை கொத்த சென்று வேடன் விரித்த வலையில் மாட்டின.
இதைக் கண்ட புறாக்களின் ராஜா நம்முடைய இனம் அழியும்போது நான் மட்டும் இருந்தென்ன பயன் என்று கூறி தானும் அந்த வலையில் வலிய சென்று சிக்கி கொண்டது.
அப்போது புறாக்களின் அரசனுக்கு ஒரு யோசனை தோன்றியது. நாம் அனைவரும் ஒன்றாக பறந்தால் வேடனால் பிடிக்க முடியாது. நாம் தப்பித்து விடலாம் என யோசனை சொன்னது. புறாக்களும் வலையோடு பறந்தன.
வேடன் துரத்தி சென்றும் அவைகளை பிடிக்க முடியவில்லை.புறாக்களும் கிடைக்கவில்லை அதோடு வலையும் பறிபோனதே என்று புலம்பியபடி வேடன் சென்றான். நடந்த அத்தனையையும் இலவ மரத்து காகம் பின் தொடர்ந்து சென்று பார்த்தது.
வலையோடு பறந்த புறாக்கள் ஒரு எலி வளை முன்பு இறங்கின. புறாக்களை கண்டு பயந்த எலி வளைக்குள் சென்று விட்டது. அந்த எலி புறாக்களின் ராஜாவுக்கு நீண்ட கால நண்பன். எலி நண்பனே நான்தான் வெளியே வா என புறாக்களின் அரசன் அழைக்கவே அறிந்த குரல் என எலி வெளியே வந்தது.
வலையில் சிக்கி இருந்த தன்னுடைய நண்பனான புறா அரசனை கண்ட எலி அறிவும் திறமையும் மிக்க நீயும் கூடவா இதில் மாட்டிக் கொண்டாய் என வருந்தியது.
எவ்வளவு சிறந்த அறிவாளியாக இருந்தாலும் எத்தனை சாமர்த்தியம் இருந்தாலும் விதியின் கோட்டை மீற முடியுமா ? எந்த காலத்தில் எந்த இடத்தில் எப்படிப்பட்ட காரணத்தால் யாரால் எவ்வளவு நல்வினைகள் தீவினைகள் அனுபவிக்க வேண்டுமோ அந்தந்த இடத்தில் அந்த காரணங்களால் அவரால் அனைத்தையும் அனுபவித்துத்தானே தீர வேண்டும் என புறாக்களின் அரசன் பதில் உரைத்தது.
மீன்களும் பறவைகளும் வலைகளில் சிக்குகின்றன. மலைக்குன்று போலிருக்கும் பெரிய பெரிய யானைகளும், தன்னுடைய விஷத்தால் அனைவரையும் கொல்லும் தன்மை படைத்த பாம்புகளும் தன்னுடைய வலிமை மறந்து போய் தம்மை பிடிப்பவர்களிடம் கட்டுண்டு கிடக்கின்றன, சூரியனும் சந்திரனும் பாம்பிடம் சிக்குகின்றன. அறிவில் சிறந்த புலவர்கள் வறுமையில் கிடப்பதும் அறிவற்றவர்களிடம் செல்வம் சேருவதும் எல்லாம் அவரவர் நல்வினை தீவினைப் படியே நடக்கிறது.இந்த வினைப்பயனை யாராலும் புறக்கணிக்க முடியாது என்று பதில் சொன்ன எலி தன்னுடைய பற்களால் வலையினை அறுத்து புறாக்களை காப்பற்றியது
எலியின் இந்த செயல்கள் காகத்தை கவர்ந்தது. எலி வளைக்குள் அலகை நீட்டி எலியை அழைத்தது.
நீ யார் ஏன் என்னை அழைத்தாய் என்று எலி கேட்டது.
நான் ஒரு இலவ மரத்து காகம். ஒரு புறா அரசன் பின்னால் வந்தேன். அவர்களை காப்பாற்றிய உன் பெருந்தன்மை குணம் என்னைக் கவர்ந்தது.உன் நட்பு திறன் மற்றும் பாச உணர்வுகள் என்னையும் உன்னுடன் நட்பு கொள்ள வேண்டும் என்று தூண்டின. அதனாலேயே உன்னை அழைத்தேன் என்றது.
அறிவு கொண்ட அந்த எலி, நானோ உன்னால் உண்ணப்படும் இரைகளில் ஒன்று. நான் எப்படி உன்னுடைய நண்பனாக முடியும். எலிகளை கொன்று தின்னும் கூட்டத்தை சேர்ந்த உன்னுடன் நான் நட்பு கொண்டால் அது எனக்கு பேராபத்தாகவே முடியும் என எலி மறுத்து பேசியது.
இதை கேட்ட காகம் மனம் நெகிழும்படி , ஐயோ என்ன வார்த்தை சொல்லி விட்டாய். உன்னை கொன்று தின்றால் ஒரு நாள் மட்டுமே பசி ஆற முடியும். மாறாக உன்னுடன் நட்பில் இருந்தால் எத்தனையோ காலங்கள் நாம் ஒன்றாக வாழலாமே என்று கூறியது. அந்த புறா அரசனிடம் நீ நட்பாக இருப்பது போல என்னுடனும் இருந்தால் என் உயிர் உள்ளவரை உன்னை காப்பேன் இன்றி கூறியது.
உங்கள் காக்கை புத்தி நிலையில்லாதது. உன்னை நண்பனாக சேர்ப்பதன் மூலம் என்னுடைய செயல்கள் எதுவும் மாறப்போவதில்லை. உன் நட்பால் எனக்கு ஆகப்போவதும் ஒன்றும் இல்லை. கப்பலை தரையிலும் தேரை கடலிலும் ஓட்ட முடியாது. சேர கூடாதவைகள் சேர்ந்தால் அந்த உறவு திடமாக இருக்காது. கெட்டுபோகுமே தவிர நன்மை எதுவும் இருக்காது. ஒழுக்கம் கெட்டவர்களிடத்து நியாயத்தை எதிர்பார்த்தும் , தீயவர்களிடம் நன்மை செய்து கொள்ள எதிர்பார்த்து நட்பு கொண்டு அதனால் நன்மை அடைந்தவர் என்று யாரும் இங்கே இல்லை. பாம்பை மடியில் கட்டிக் கொண்டு பயணிப்பவர் போல பயந்தே சாக வேண்டியதுதான் என்று எலி மீண்டும் மறுத்துரைத்தது.
அதற்கு காகம். இரும்பை கண்ட உடன் காந்தம் போய் ஒட்டி கொள்ளும். அதே சமயம் இரும்பு துண்டுகளோ நெருப்பில் வாட்டி வருத்தப்பட்ட பின்னரே ஒன்றாக ஒட்டிக்கொள்ளும்.அதை போலவே நல்லவர்கள் கண்டவுடன் நண்பர்கள் ஆகி விடுவார்கள். ஆனால் கெட்டவர்களோ தண்டனை காலத்தில் ஒன்று சேர்ந்து கொள்வார்கள்.
உன் அறிவின் உயர்வையும் உன் நெஞ்சில் கொண்ட நட்பின் தன்மையையும் அந்த நட்பை நீ பாதுகாக்கும் முறையையும் பார்த்தே நான் உன்னுடன் நட்பு கொள்ள விரும்பினேன். என்னை நீ நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். உன் நட்பு ஒன்றை மட்டுமே நாடி வந்திருக்கிறேன் என்று கூறியது.
காகத்தின் பேச்சால் கரைந்த எலி காகத்துடன் நண்பனாக சம்மதித்தது.
அன்று முதல் காகம் தனக்கு கிடைக்கும் இரைகளை எல்லாம் கொண்டு வந்து எலியுடன் சேர்ந்து பகிர்ந்து உண்ண ஆரம்பித்தது. எலியும் மகிழ்ந்தது. அப்போது அந்த கானகத்தில் இரை தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் காகம் எலியிடம் என்னுடைய நண்பன் ஆமை ஒருவன் இருக்கிறான். அங்கே சென்றால் அவன் வசிக்கும் குளத்தில் இருக்கும் மீன்களை பிடித்து உண்ண தருவான் என்று கூறியது.
எலியும் சம்மதித்தது. காகமும் எலியும் ஆமையும் நண்பர்களாயின. ஆமை மீன்கள் கொண்டுவரும். காகம் இறைச்சி கொண்டு வரும். எலி சோறு கொண்டு வரும். மூன்று நண்பர்களும் ஒன்றாக இணைந்து பகிர்ந்து உண்டு அன்போடு உரையாடி மகிழ்ந்தன.
இப்படி அன்பாக அவைகள் வாழ்ந்து வந்த போது ஒரு சமயம் மான் ஒன்று பயந்து வெடவெடத்து நடுங்கியபடி அங்கே ஓடி வந்தது. நடுங்குகிற மானை பார்த்து ஏன் இப்படி நடுங்கி கொண்டிருக்கிறாய் என்று அந்த மூன்று நண்பர்களும் மானை விசாரித்தனர்.
எமன் போன்ற ஒரு வேடன் என்னை துரத்தி கொண்டு வருகிறான், எனக்கு உறவு என்று யாரும் இல்லை. நீங்கள் அனைவரும் எனக்கு உதவினால் உங்களையே என் உறவினராக கருதி பாசத்துடன் இருப்பேன் என்று கூறியது மான். அதன் வார்த்தைகளில் இருந்த உண்மையால் கவரப்பட்ட நண்பர்கள் மானை காப்பாற்றினர்.
அதன்பின் பல நாட்கள் மானும் எலியும் காகமும் ஆமையும் நண்பர்களாக வாழ்ந்தனர். மீண்டும் ஒருமுறை தன்னுடைய அறிவின்மையால் மான் வேடனின் வலையில் மாட்டி கதறியது. மானை காப்பாற்ற எலி ஆமை மற்றும் காகம் ஓடி வந்தன.
எப்படி வலையினுள் மாட்டினாய் என முதலில் வந்த காகம் கேட்டது. எல்லாம் பின்னால் விவரமாக சொல்கிறேன் இப்போது என்னை காப்பாற்றுங்கள் என்றது மான். எலி தன்னுடைய பற்களால் வலையை அறுத்தது. அப்போது அங்கே வேடன் வரவே மான் தப்பித்து ஓடியது. எலி வளைக்குள் புகுந்தது. காகம் பறந்தது. ஆனால் ஊர்ந்து கொண்டிருந்த ஆமை மாட்டிக் கொண்டது. வேடன் அதனை பையில் போட்டு கொண்டு மானை துரத்தி ஓடினான்.
காகம் பறந்தபடியே மானிடம் பேசியது. ஆமை வேடனிடம் மாட்டி கொண்டதாகவும் சிறிது நேரம் மான் இறந்தது போல நடித்தால் ஆமையை காப்பாற்றி விடலாம் என்றும்கூறியது. சம்மதித்த மான் நதியோரம் இறந்தது போல படுத்திருந்தது. துரத்தி வந்த வேடன் மானை பார்த்ததும் பையை கீழே வைத்து விட்டு மானிடம் வந்தான்.
அந்த நேரம் பைக்குள் இருந்த ஆமை அருகே இருந்த நதிக்குள் குதித்து விட்டது. மான் துள்ளி எழுந்து ஓடி விட்டது. மானை துரத்தினான் வேடன். காடுகளுக்குள் புகுந்த மான் ஒரு புதரில் மறைந்தது. எலி வளைக்குள் ஒதுங்க காகம் மரத்தில் பதுங்கியது. வேடன் ஏமாற்றத்துடன் திரும்பி போனான்.
அதன் பின் நண்பர்கள் நால்வரும் சந்தோஷமாக நதிக்கரையில் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தன.
நீதி : நல்லவர்கள் நட்பு போல லாபமான விஷயம் வேறொன்றுமில்லை.
8. மூன்று மீன்கள்
ஒரு குளத்தில் மூன்று மீன்கள் இருந்தன. வருமுன் காப்போன் , வருங்கால் காப்போன் , வந்தபின் காப்போன் என்பது அவற்றின் பெயர்கள். பல காலம் அவை நண்பர்களாக அந்த குளத்தில் வாழ்ந்து வந்தன.
ஒருமுறை மீன் பிடிக்கும் வலைஞர்கள் அந்த குளத்திற்கு வந்து சேர்ந்தனர். நாளை இந்தக் குளத்தில் மீன் பிடிக்கலாம் என்று கூறியபடி சென்றனர்.
இதனைக் கேட்டு கொண்டிருந்த வருமுன் காப்போன் தன்னுடைய நண்பர்களை அழைத்து. இங்கிருக்கும் சிறு கால்வாய் வழியே நாம் அருகிருக்கும் ஆறுக்கு சென்று விடலாம் என்று கூறியது. வருங்கால் காப்போனும் வந்தபின் காப்போனும் மீனவர்கள் வந்தால் பார்த்துக் கொள்ளலாம் சமயத்துக்கு ஏற்றாற்போல ஏதாவது தந்திரம் செய்து கொள்ளலாம் என்று அலட்சியமாக கூறியது.
இதனால் வருமுன் காப்போன் முன்பே தன்னை காப்பாற்றி கொள்ள அருகில் இருக்கும் ஏரிக்கு சென்ற

Community Experiences
Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.