மாதவிலக்கு நாட்களில் அதிக ரத்தப்போக்கு ? அவசியம் படியுங்கள்

Written by Sruti Bhattacharjee
Last Updated on

பெரும் துயரங்களில் மிக முக்கியமான ஒன்றுதான் மாதவிலக்கு. இந்த உலகம் அசுர வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்த காலத்திலும் கூட மாதவிலக்கு பற்றிய பயத்துடன் வாழும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மாதவிலக்கு என்றாலே ரத்தப்போக்கு, வலி, சரும எரிச்சல்கள், நரம்பு பிடிப்புகள் என பல துன்பங்கள் பக்கவிளைவுகளாக நடந்து கொண்டே இருக்கும். அவற்றுள் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுவது தான் அதிக ரத்தப்போக்கு எனும் menorrhagia. (1), (2)

மற்றவைகளைப் போல சாதாரணமாக இதைக் கடந்து போகக் கூடாது. அலட்சியம் பல சமயங்களில் ஆரோக்கிய ஆபத்துக்களை ஏற்படுத்தலாம். ( Heavy Menstrual bleeding in tamil )

அதிக ரத்தப்போக்கு எது என்பதை எப்படி கண்டறிவது

பொதுவாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நாள்கள் ரத்தப்போக்கு அதிகமாக இருக்கும். மாதவிலக்கின் முதல் நாளில் அதிக ரத்தப்போக்கு ஏற்படலாம். அல்லது இரண்டாவது நாளில் இப்படி நடக்கும். ஒரு சிலருக்கு நான்காவது நாளில் கூட இது நிகழலாம். (3)

உங்கள் மாதவிலக்கு காலத்தின் தொடக்கத்தில் இரண்டு அதிக ரத்த ஓட்ட நாட்கள் இயல்பானவை. நாம் அனைவரும் ஒரு டம்பன் வழியாக நாப்கின் வழியாக ரத்தம் கசிந்திருக்கிறோம். ஆனால் நீங்கள் உறங்கி எழுந்த பெட் கவரையும் அந்த ரத்தம் தொடர்ந்திருந்தால் ?

ஆனால் உண்மையில் அதிகமான ரத்தப்போக்கு என்பது அடிக்கடி நாப்கின் மாற்றும்படி உங்களை வற்புறுத்தும் ரத்தப்போக்கு தான் எனலாம். உங்கள் தினசரி செயல்பாடுகள் குறைந்து போகலாம். அல்லது நாள் முழுக்க அயர்வாக இருக்கலாம். உடலில் உள்ள சிவப்பணுக்கள் குறைவதால் ரத்த சோகை ஏற்படும். இந்த மாதவிலக்கு அதிக ரத்தப்போக்கு என்பதும் இப்படியான ரத்த சோகையை உங்களுக்கு ஏற்படுத்தலாம்.  (menorrhagia in tamil) (4) (5)

அமெரிக்க மகப்பேறியல் மற்றும் மகப்பேறு மருத்துவக் கல்லூரியின் கூற்றுப்படி, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்று அதிக இரத்தப்போக்குக்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது: (6)

 • ஏழு நாட்களுக்கு மேல் இரத்தப்போக்கு
 • ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட டம்பான்கள் அல்லது நாப்கின்கள் பயன்படுத்துவது
 • இரவில் தூக்கத்திற்கு நடுவே எழுந்து நாப்கின்களை மாற்றுவது
 • கசிவு ஏற்படாமல் இருக்க இரண்டு நாப்கின்கள் ஒரே சமயத்தில் பயன்படுத்துவது
 • உங்கள் மாதவிலக்கு கசிவில் உள்ள இரத்தக் கட்டிகள் அதிகமாவது

போன்ற அறிகுறிகள் நீங்கள் அதிக ரத்தப்போக்கு கொண்ட ஒரு மாதவிடாய் காலத்தை அனுபவிக்கிறீர்கள் என்பதைப்  பறைசாற்றுகிறது.

அதிக ரத்தப்போக்கிற்கான காரணங்கள்

 1. உங்கள் கருப்பை வாய் அல்லது கருப்பையில் பாலிப்ஸ் ஏற்படுவது
 1. எண்டோமெட்ரியோசிஸ்
 1. இடுப்பு அழற்சி நோய்
 1. கருப்பை நார்த்திசுக்கட்டிகள்
 1. பெண்ணோயியல் புற்றுநோய்
 1. இரத்தப்போக்கு கோளாறு
 1. ஒழுங்கற்ற மாதவிலக்கு சுழற்சி (பெரும்பாலும் பி.சி.ஓ.எஸ் காரணமாக ஏற்படுகிறது) (menorrhagia causes in tamil) (7)

மேலும் சில காரணங்கள்

இரத்தப்போக்குக் கோளாறுகள் – இரத்தம் சரியாக உறைந்து போகாதபோது, ​​அது அதிக இரத்தப்போக்கு ஏற்படுத்தும்.

மருந்துகள் – இரத்த மெலிதல் மற்றும் ஆஸ்பிரின் போன்ற மருந்துகள் அதிக மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்படுத்தும். செப்பு கருப்பையக சாதனம் (IUD) அதிக மாதவிடாய் இரத்தப்போக்கை ஏற்படுத்தும், குறிப்பாக பயன்பாட்டின் முதல் ஆண்டில் இது நடக்கலாம்.

புற்றுநோய் – கடுமையான மாதவிடாய் இரத்தப்போக்கு எண்டோமெட்ரியல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறியாகும். 60 களின் நடுப்பகுதியில் கடந்த மாதவிடாய் நின்ற பெண்களில் எண்டோமெட்ரியல் புற்றுநோயின் பெரும்பாலான வழக்குகள் கண்டறியப்படுகின்றன. இது பெரும்பாலும் ஆரம்ப கட்டத்தில் கண்டறியப்படும் போது சிகிச்சையானது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

அதிக ரத்தப்போக்கு சொல்லும் எச்சரிக்கைகள் என்ன

கடுமையான மாதவிடாய் இரத்தப்போக்கு என்பது உடனடி சிகிச்சை தேவைப்படும் ஒரு அடிப்படை சுகாதார பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். கனமான மாதவிலக்கு காலங்கள் இரத்த இழப்பு இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை எனப்படும் நிலைக்கு வழிவகுக்கும். கடுமையான இரத்த சோகை மூச்சுத் திணறலை ஏற்படுத்தும் மற்றும் இதய பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். (menorrhagia signs in tamil)

ஒவ்வொரு வயதிற்கேற்ப இந்த எச்சரிக்கைகள் மாறுபடும்  (8)

20 முதல் 25 வயது எனில் : பாலிசிஸ்டிக் ஓவரி சிக்கல்கள் காரணமாக இவர்களுக்கு இது ஏற்படலாம்.

முறையற்ற உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையும் இதற்கு காரணமாக அமையலாம்.

25 முதல் 45 எனில் : இந்த வயதில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும்போது அலட்சியம் காட்டக் கூடாது. கருப்பை வாய் புற்று நோய்க்கான காரணமாக இது இருக்கலாம். ஆரம்ப கால சிகிச்சையில் அனைத்தையும் குணப்படுத்தி விடலாம். இரண்டாவது கருக்கலைப்பு போன்ற அறிகுறிகளையும் இது காட்டலாம். ஆகவே இந்த வயதில் அதிக ரத்த போக்கு எனில் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

45 வயதிற்கு மேல் : மெனோபாஸ் காலங்களில் அதிக ரத்தப்போக்கு என்பது பெரும்பாலும் இருக்க கூடாது. கருப்பை வாய் சுருங்கும் இந்த நேரங்களிலும் அதிக ரத்தப்போக்கு இருப்பின் உடனடி மருத்துவ ஆலோசனை மிக மிக அவசியமானது. மாதவிலக்கு நின்ற பின்னும் சில மாதம் கழித்து அதிக ரத்த போக்கு ஏற்பட்டால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

அதிக ரத்தப்போக்கை சரி செய்யும் உணவுகள்

ரத்த சோகை என்பது பெரும்பாலும் பெண்களுக்கு தான் அதிகமாக இருக்கிறது. ஏன் எனில் பூப்பெய்துதல் , மாதவிலக்கு , பிரசவம் போன்ற நிகழ்வுகளால் பெண்கள் அதிக ரத்தத்தை இழக்கிறார்கள். தாய்ப்பால் என்பதும் ஒருவகையான ரத்தமே என்பதால் ரத்த இழப்புகளை பெண்கள் அதிகம் சந்திக்கிறார்கள். (Heavy menstrual bleeding in tamil)

உணவு மாற்றங்கள் – சில நேரங்களில், உணவு என்பதே சிறந்த மருந்தாக செயல்படுகிறது. உங்கள் உணவில் அதிக இரும்புச்சத்து கிடைப்பது அதிக இரத்தப்போக்கைக் குறைக்கவும், இரத்த இழப்பால் ஏற்படும் இரத்த சோகையைத் தடுக்கவும் உதவும் (9). ( Diet for Heavy menstrual bleeding )

 • இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான
 • இறைச்சி,
 • கடல் உணவு,
 • பீன்ஸ், கொட்டைகள்,
 • விதைகள் மற்றும்
 • கீரை மற்றும் பச்சை காய்கறி
 • ஆரஞ்சு,
 • பெல் பெப்பர்ஸ்
 • ப்ரோக்கோலி

போன்ற வைட்டமின் சி நிறைய உணவுகளை உட்கொள்வது உங்கள் உணவில் உள்ள கூடுதல் இரும்பை உறிஞ்சுவதற்கு உங்கள் உடல் உதவும். மேலும், பதப்படுத்தப்பட்ட சர்க்கரை, டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் ஸ்டார்ச் கார்ப்ஸ் ஆகியவற்றைக் கொண்ட உணவுகளைத் தவிர்க்க உங்களால் முடிந்த அனைத்தையும் செய்யுங்கள். இந்த உணவுகள் மாதவிடாய் நேரங்களை மிகக் கடினமானதாக ஆக்கும்.

மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் மேற்கண்ட மாற்றங்களை நீங்கள் சரியான முறையில் கையாண்டால் உங்கள் ஆரோக்கியம் மட்டுமல்ல உங்கள் குடும்பாத்தாரின் மனநிம்மதியும் காப்பாற்றப்படும் என்பதில் சந்தேகமே இல்லை.

References

Was this article helpful?
thumbsupthumbsdown
  Latest Articles