முட்டைக்கோஸின் நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள் – Cabbage (Patta Gobhi) Benefits, Uses and Side Effects in Tamil

Written by
Last Updated on

மிக பிரபலமான, அதிக ஊட்டச்சத்துக்களை கொண்ட, வித்தியாசமான  அமைப்பு கொண்ட காய்கறிகளில் ஒன்று தான் முட்டைக்கோசு அல்லது முட்டைக்கோஸ். இதை அதிகம் சமைக்காமல், ஓரளவு சமைத்து உண்டால் இதில் அடங்கி உள்ள ஊட்டச்சத்துக்களை முற்றிலுமாக நம்மால் பெற முடியும். இந்த முட்டைக்கோசு வெவ்வேறு நிறங்களில் கூட கிடைக்கும் மற்றும் முட்டைகோஸின் இலைகள் சுருங்கியும், மிருதுவாகவும் இருக்கும். முட்டைகோஸின் சுவையும் சற்று வித்தியாசமானதாகவே இருக்கும்; இதில் எக்கச்சக்க சத்துக்கள் நிரம்பியுள்ளன.

முட்டைகோசு குறித்த மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதில் அடங்கியுள்ள அரும் பெரும் நன்மைகள் மற்றும் இக்காய்கறி மனித குலத்திற்கு அளித்து வரும் வியத்தகு பலன்கள் போன்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பதிப்பில் முட்டைக்கோஸால் ஏற்படும் நன்மைகள், பயன்கள், பக்க விளைவுகள் பற்றி படித்து அறியலாம்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் ஏன் நல்லது?

முட்டைகோஸில் நன்கு முக்கிய ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் நிறைந்து உள்ளன; அவையாவன: கோலைன், பீட்டா கரோட்டின், லூடெய்ன் மற்றும் கொயர்செட்டின். இப்பொழுது இந்த நான்கு ஆன்டி ஆக்சிடென்ட் சத்துக்களும் என்னென்ன நன்மைகளை வழங்குகின்றன என்று ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

கோலைன் எனும் சத்து, உங்களது நினைவாற்றல் மற்றும் உடலில் ஏற்படும் அழற்சிக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது; மேலும் இது கர்ப்பிணி பெண்களில் ஏற்படக்கூடிய நரம்பு குழாய் சார்ந்த பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது (1).

பீட்டா கரோட்டின் எனும் சத்து, புகைகளினால் ஏற்படும் விளைவுகளில் இருந்து மனிதர்களின் டிஎன்ஏவை (DNA) காக்க உதவுகிறது (2).

லூடெய்ன் எனும் சத்து, வயது சார்ந்த மாகுலர் சீர்கேடுகளை தடுக்க உதவுகிறது (3).

கொயர்செட்டின் எனும் சத்து, தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவிற்கு எதிராக மற்றும் நோய்களுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது (4).

முட்டைகோசு ஒரு குறுக்குவெட்டு அமைப்பு கொண்ட காய்கறி ஆகும். இக்காய்கறியில் வைட்டமின்கள் சி, கே, பி ஆகியவை நிறைந்து உள்ளன; இவை எக்கச்சக்க நன்மைகளை வாரி வழங்குகின்றன. முட்டைகோஸில் பல வித்தியாசமான வகைகள் உள்ளன; அவையாவன:

  • கேனன்பால் முட்டைக்கோஸ் (இதை பச்சை முட்டைக்கோஸ் என்று பொதுவாக அழைக்கப்படும்)
  • போக் சோய்
  • சோய் சம்
  • நாபா முட்டைக்கோஸ்
  • சவோய் முட்டைக்கோஸ்
  • சிவப்பு முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸின் வகை எப்படிப்பட்டதாய் இருந்தாலும், அவற்றின் நன்மைகள் ஒரே மாதிரியாக தான் இருக்கும்; பொதுவாக குறுக்குவெட்டு தோற்றம் கொண்ட எல்லா காய்கறிகளுமே அதிக நன்மை பயக்கக்கூடியவை என்று ஆய்வுகள் கருத்து தெரிவித்துள்ளன. முட்டைக்கோஸினால் ஏற்படும் முக்கிய நன்மைகள் என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.

முட்டைக்கோஸின் நன்மைகள்

முட்டைக்கோஸ் அதிகமான ஆன்டி ஆக்சிடெண்ட்டுகள், ஆந்தோசையனின்கள், சல்ஃபோரபேன் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை இதய நோய், புற்றுநோய் போன்ற நோய்களை தடுக்கவும், அழற்சிக்கு எதிரான செயல்பாட்டை நல்கவும் உதவுகின்றன. முட்டைக்கோஸின் புளித்த வடிவங்கள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பல அதிசயங்களை புரியவல்லவை.

முட்டைக்கோஸில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துகள் பட்டியல் மிகவும் நீண்டது; அது குறித்து பின் வரும் பத்திகளில் காணலாம். இப்பொழுது முட்டைக்கோஸால் ஏற்படக்கூடிய முக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

நன்மை 1: செரிமானம் மற்றும் மலச்சிக்கல்

முட்டைக்கோஸில் இருந்து தயாரிக்கப்படும் பிறிதொரு புளித்த உணவான கிம்சி, உடலின் செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது; இதில் புரோபையாட்டிக்குகள் அதிகம் நிறைந்துள்ளன. இது யோகர்ட் மற்றும் பிற பால் பொருட்கள் போன்று செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது (5). கிம்சி, மலச்சிக்கலை தடுத்து, பெருங்குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.

முட்டைக்கோஸில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம் அடங்கியுள்ளன. இது மலத்தை ஒன்றாக சேர்த்து, தொடர்ந்து ஒட்டுமொத்தமாக மலம் வெளியேற உதவுகிறது (6). இது நல்ல கட்- ஃ பிரண்ட்லி அதாவது வயிற்றின் செயல்படுகளுக்கு துணை புரியும் பாக்டீரியாவை உடலில் அதிகரிக்க உதவுகிறது (7).

நன்மை 2: புற்றுநோய்

சல்ஃபோராபேனின் புற்றுநோய்க்கு எதிரான விளைவுகள் மீது ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் இருக்கின்றன; மூலக்கூறு அளவில், இந்த ஆன்டி ஆக்சிடென்ட் நல்ல பலன்களை அளித்து வருகிறது (8).

முட்டைக்கோஸில், ஐசோதியோனேட்கள் எனும் வேறொரு சத்துக்கள் அமைந்துள்ளன. இவை கார்சினோஜென்களை விஷத்தன்மையில் இருந்து வெளிக்கொண்டு வந்து, அவற்றை உடலை விட்டு நீங்குமாறு செய்கின்றன (9).

முட்டைக்கோஸில் காணப்படும் பிரஸ்ஸின் எனும் பொருள் கீமோபிரிவென்ட்டிவ் செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது (10).

எலிகளில் நடத்தப்பட்ட ஆய்வில், முட்டைக்கோஸில் இருக்கும் சத்துக்கள் சிறுநீர்ப்பை, மார்பகம், பெருங்குடல், கல்லீரல், வயிறு மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது (11).

நன்மை 3: கண் பார்வை ஆரோக்கியம்

Cabbage (Patta Gobhi) Benefits, Uses and Side Effects in Tamil
Image: Shutterstock

முட்டைக்கோஸில் உள்ள லூடெய்ன் சத்து கண் பார்வை ஆரோக்கியத்திற்காக பங்களிக்கிறது; லூடெய்ன் (ஜியாசாந்தின் எனும் இன்னொரு ஆன்டி ஆக்சிடென்ட்டுடன் சேர்ந்து) கண்ணின் ரெட்டினா மற்றும் லென்ஸை புற ஊதா கதிர்களில் இருந்து காக்க உதவுகிறது (12). முட்டைக்கோஸில் ஜியாசாந்தின் எனும் ஆன்டி ஆக்சிடென்ட் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

கண் பார்வை ஆரோக்கியத்திற்கு உதவும் மற்றொரு ஊட்டச்சத்து வைட்டமின் சி ஆகும். இது கண்களின் உட்புறத்தில் வைட்டமின் ஈ சத்தை மீள் உருவாக்கம் செய்ய உதவும் முக்கியமான ஆன்டி ஆக்சிடென்ட்டாக திகழ்கிறது; கண் பார்வை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது (13).

நன்மை 4: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

முட்டைக்கோஸில் அடங்கி உள்ள வைட்டமின் சி சத்து நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவுகிறது (14). இந்த ஆன்டி ஆக்சிடென்ட் இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்களை தூண்டி விட்டு, நோய்களுக்கு எதிராக போராடும் நிலையில் இருக்குமாறு செய்கிறது. இது T செல்களின் முதிர்ச்சியை அதிகரித்து உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு தேவையான முக்கிய சத்தை வழங்குகிறது (15).

உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமானவை இரத்த வெள்ளை அணுக்கள் தான்; அத்தகைய அணுக்களை தூண்டி, அவற்றின் செயல்பாட்டை அதிகரிக்க முட்டைக்கோஸ் பெரிதும் உதவுகிறது. அடிக்கடி உணவில் முட்டைக்கோஸ் வகைகளை சேர்த்து வந்தால், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் பெற்று, சிறந்த நோய் எதிர்ப்பு தன்மையை அடைந்து நோய் நொடிகள் இல்லாமல், ஆரோக்கியமாக இருக்கலாம்.

நன்மை 5: உடல் எடை குறைத்தல்

Cabbage (Patta Gobhi) Benefits, Uses and Side Effects in Tamil
Image: Shutterstock

பழங்கள் மற்றும் காய்கறிகள் (குறிப்பாக நார்ச்சத்து மிகுந்த முட்டைக்கோஸ்) போன்றவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன (16). முட்டைக்கோஸை மட்டும் சார்ந்து மேற்கொள்ளப்பட்ட உடல் எடை குறைத்தலுக்கான டயட் முறை அதாவது முட்டைக்கோஸ் சூப் டயட் முறை குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு, அதற்கு நல்ல பலன்கள் கிடைத்துள்ளன என்று கூறப்படுகிறது.

இந்த டயட் முறையில், தொடர்ந்து ஏழு நாட்களுக்கு அதிகளவு முட்டைக்கோஸை – முட்டைக்கோஸ் சூப்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்; இதனுடன் இதர பழங்கள், காய்கறிகள், பிரௌன் ரைஸ், சிக்கன், மாட்டிறைச்சி போன்றவற்றையும் கூட உட்கொள்ளலாம்.

உடல் எடையை விரைவாக குறைக்க இது ஒரு நல்ல உணவாக, காரணியாக அமைந்து வருகிறது என்று கூறப்படுகிறது; ஆனால், இந்த டயட் முறையை ஏழு நாட்கள் அல்லது ஒரு வாரத்திற்கு மேல் கடைபிடிக்க வேண்டாம்; ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் இதர வைட்டமின்கள் & கனிமச்சத்துக்கள் குறைவாகவே உள்ளன (17).

உடல் எடையை குறைக்க சரியான டயட் முறையோடு, முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியதும் மிகவும் அவசியம். உடல் எடை குறைத்தலுக்கு இந்த முட்டைக்கோஸ் சாறு டயட் முறையை மேற்கொள்ளும் முன் மருத்துவரை ஒரு முறை கலந்தாலோசித்து விடுவது நல்லது.

நன்மை 6: அல்சர்/ புண்

அல்சர் என்பது சாதாரணமாக பல மக்களுக்கு ஏதேனும் ஒரு உணவு அல்லது உடல் சீரற்ற தன்மை காரணமாக ஏற்படக்கூடிய ஒரு நோய்க்குறைபாடு ஆகும். வயிற்றில் அல்லது உடலின் உறுப்புகளில் ஏற்படக்கூடிய அல்சர் என்னும் புண்ணை சரி செய்ய உதவும் மிகச்சிறந்த உணவு முட்டைகோஸ் ஆகும்; இதில் காணப்படும் ஆன்டி ஆக்சிடென்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அல்சர் நோயை குணப்படுத்த உதவுகின்றன.

ஒரு ஆய்வில் அல்சர் கொண்ட சில நபர்களுக்கு நாள் முழுவதும் 946 மில்லி லிட்டர் அளவுள்ள முட்டைகோஸ் சாறு வழங்கப்பட்டது; இதை பருகிய பின் அந்நபர்களில் பெரும்பான்மையோருக்கு 7-10 நாட்களில் அல்சர் நோயின் தீவிரம் குறைந்து, அந்நோயிலிருந்து விடுதலை கிடைத்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நன்மை 7: தசை வலி

மக்களில் பலருக்கு கடினமான வேலைகளை செய்த பின் அல்லது தொடர்ச்சியாக வேலை செய்த பின் ஏற்படக்கூடிய ஒரு சாதாரணமான குறைபாடு தசை வலி ஆகும். இதனை போக்க சரியான உணவு முறையே போதுமானது.

ஏராளமான ஊட்டச்சத்துக்களை கொண்ட ஒரு அற்புதமான உணவு முட்டைக்கோஸ் ஆகும்; இதை உட்கொண்டால் தசை வலி போன்ற பிரச்சனைகள் குறையும். மேலும் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கப்படும்.

முட்டைக்கோஸின் இலைகளை தசை வலி அல்லது மூட்டு வலி உள்ள இடங்களில் தொடர்ந்து ஏழு நாட்களுக்கு வைத்து வந்தால், வலி குறைந்து நிவாரணம் பெறலாம் என்று கூறப்படுகிறது; எந்த ஒரு மருந்து, மாத்திரை, ஊசி என எதுவும் இல்லாமல், உடலில் ஏற்படும் தசை வலிகளில் இருந்து உடனடி நிவாரணத்தை முட்டைக்கோஸ் இலைகள் மூலம் பெறலாம்.

நன்மை 8: இதய ஆரோக்கியம்

Cabbage (Patta Gobhi) Benefits, Uses and Side Effects in Tamil
Image: Shutterstock

சிவப்பு முட்டைக்கோஸில் ஆந்தோசையனின்கள் அதிகம் நிறைந்துள்ளன (18). இந்த உறுப்புகள் தான் முட்டைக்கோஸ் சிவப்பு நிறமாக இருப்பதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். ஆந்தோசையனின்கள் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பை குறைக்க பெரிதும் உதவுகின்றன (19).

ஆந்தோசையனின்களை அதிகம் உட்கொண்டால், இள வயதினர் மற்றும் நடுத்தர வயது பெண்களில் ஏற்படக்கூடிய  மையோகார்டியல் நோயை தடுக்கலாம் (20). இந்த அந்தோசையனின்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகின்றன (21).

சார்க்ராட் எனும் புளித்த முட்டைக்கோஸ் தயாரிப்பு, இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது; ஆர்த்ரிட்டிஸில் கடினத்தன்மையை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களை கொண்ட நல்ல தாவரங்களை நடுநிலைப்படுத்த இது உதவுகிறது (22).

சிவப்பு முட்டைக்கோஸ் உடலில் கெட்ட கொழுப்புகள் உருவாவதை தடுத்து, இதயத்தை பாதுகாக்க உதவுகிறது (23).

நன்மை 9: அழற்சி எதிர்ப்பு

அழற்சிகளில் ஒன்றான குரோனிக் அழற்சி நன்மை பயப்பது அல்ல; இவ்வாறு தீமையை ஏற்படுத்தும் குரோனிக் அழற்சிக்கு எதிராக போராடும் தன்மையை குறுக்குவெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் கொண்டுள்ளது (24).

ஒரு ஆராய்ச்சியில் குறுக்குவெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகளை அதிகம் உட்கொண்ட பெண்களில் குறைவான அழற்சி அளவுகள் காணப்பட்டன என்ற தகவல் வெளியாகியுள்ளது (25). இது குறுக்குவெட்டு தோற்றம் கொண்ட காய்கறிகளில் காணப்படும் சல்ஃபோராபேன் எனும் ஆன்டி ஆக்சிடென்ட்டுடன் தொடர்பு உடையது (26). சல்ஃபோராபேன் எனும் சத்து மூட்டுக்களில் ஏற்படும் சேதத்தை போக்கவும் உதவுகிறது (27).

வேறொரு ஆய்வில், ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ் உள்ள நோயாளிகள் முழங்காலில் ஏற்படும் அழற்சியை போக்க முட்டைக்கோஸ் இலைகளை அதன் மீது சுற்றி வைத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது (28).

முட்டைக்கோஸில் உள்ள பைட்டோ வேதிப்பொருட்கள் அழற்சி போன்ற உடல் பிரச்சனைகளை எதிர்த்து போராடவும், புற்றுநோய் மற்றும் கரோனரி இதய நோய் போன்ற நோய்களை தடுக்கவும் உதவுகின்றன (29).

நன்மை 10: நீரிழிவு நோய்/ சர்க்கரை நோய்

சிவப்பு முட்டைக்கோஸில் உள்ள ஆன்டி ஹைப்பர்கிளைமிக் பண்புகள், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகின்றன (30). சிவப்பு முட்டைக்கோஸில் இருந்து எடுக்கப்படும் பொருட்கள் நீரிழிவு நோயை தடுக்க உதவுவதுடன், அதன் வாஸ்குலர் சிக்கல்களையும் போக்க உதவுகின்றன (31).

விரதம் இருக்கும் அதாவது உண்ணாமல் இருக்கும் முயல்கள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், முட்டைக்கோஸில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் இரத்த அழுத்த அளவுகளை குறைத்து, நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய அறிகுறிகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகின்றன (32).

சர்க்கரை நோயை குணப்படுத்துவதில் ஆந்தோசையனின்கள் பெரிதும் பயன்படுகின்றன (33).

நன்மை 11: சரும ஆரோக்கியம்

Cabbage (Patta Gobhi) Benefits, Uses and Side Effects in Tamil
Image: Shutterstock

முட்டைக்கோஸில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் நிரம்பியுள்ளன; இந்த சத்து கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், வடிவமைக்கப்பட்ட புரதத்தை உருவாக்கவும் உதவி, தோல் உருவாதல் மற்றும் காயங்களை குணப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளுக்கு உதவுகின்றன (34).

தோல் புற்றுநோயை தடுப்பதில் சிவப்பு முட்டைக்கோஸ் ஒரு முக்கிய பங்காற்றுகிறது (35).

நன்மை 12: தலைமுடி ஆரோக்கியம்

முட்டைக்கோஸில் கொயர்செட்டின் எனும் சத்து நிறைந்துள்ளது; இந்த ஆன்டி ஆக்சிடென்ட் அலோபேஷியா அரியேடா (திடீர் முடி இழப்பை ஏற்படுத்தும்) குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது (36). எலிகளில் நடத்தப்பட்ட சோதனையில் கொயர்செட்டின் சத்து உட்புகுத்தப்பட்ட எலிகளில் அலோபேஷியா அரியேடா குறைபாடு குறைந்து, முடி வளர்ச்சி ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்; அதன் பின் தான் முட்டைக்கோஸில் காணப்படும் கொயர்செட்டின் மனிதர்களில் எத்தகு முடி வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று தெளிவாக கூற முடியும்.

முட்டைக்கோஸ் என்பது பல வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை நிறைந்த ஊட்டச்சத்து மிகுந்த ஒரு காய்கறி ஆகும்; இதில் எத்தகைய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன என்பது குறித்து கீழே படித்தறிவோம்.

முட்டைக்கோஸின் ஊட்டச்சத்து மதிப்பு

பிற எந்த ஒரு காய்கறிகள் அல்லது பழங்களில் இல்லாத அளவு, அதிகமான ஊட்டச்சத்துக்களை கொண்டது முட்டைக்கோஸ் ஆகும்; இதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஏராளமான நன்மைகளை வாரி வழங்கக்கூடியவை. அது பற்றி முந்தைய பத்திகளில் தெளிவாக படித்து அறிந்தோம்; முட்டைகோசு வழங்கும் பலன்களை அறிந்த நாம் அதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன, தாதுக்கள் யாவை என்பது பற்றியும் அறிய வேண்டியது மிகவும் அவசியம்.

இப்பொழுது ஒரு அற்புதமான ஊட்டச்சத்து மதிப்புகளை கொண்ட, ஓர் அருமையான காய்கறியான முட்டைக்கோஸில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.

கலோரி தகவல் 
ஒரு குறிப்பிட்ட தேந்தெடுக்கப்பட்ட நேரத்திற்கு தேவையான அளவு தினசரி மதிப்பு (%)
கலோரிகள்22.2(92.9 kJ)1%
கார்போஹைட்ரேட்டில் இருந்து18.7(78.3 kJ)
கொழுப்பில் இருந்து0.7(2.9 kJ)
புரதத்தில் இருந்து2.8(11.7 kJ)
ஆல்கஹாலில் இருந்து0.0(0.0 kJ)
கார்போஹைட்ரேட்கள்
ஒரு குறிப்பிட்ட தேந்தெடுக்கப்பட்ட நேரத்திற்கு தேவையான அளவு தினசரி மதிப்பு (%)
மொத்த கார்போஹைட்ரேட்5.2 g2%
உணவு முறை நார்ச்சத்து2.2 g9%
ஸ்டார்ச்0.0 g
சர்க்கரை2.8 g
புரதம் மற்றும் அமினோ அமிலங்கள்
ஒரு குறிப்பிட்ட தேந்தெடுக்கப்பட்ட நேரத்திற்கு தேவையான அளவு தினசரி மதிப்பு (%)
புரதம்1.1 g2%
வைட்டமின்கள் 
ஒரு குறிப்பிட்ட தேந்தெடுக்கப்பட்ட நேரத்திற்கு தேவையான அளவு தினசரி மதிப்பு (%)
வைட்டமின் ஏ87.2 IU2%
வைட்டமின் சி32.6 mg54%
வைட்டமின் டி~~
வைட்டமின் ஈ (ஆல்பா டோகோஃபெரல்)0.1 mg1%
வைட்டமின் கே67.6 mcg85%
தையமின்0.1 mg4%
ரிபோஃபிளவின்0.0 mg2%
நியாசின்0.2 mg2%
வைட்டமின் பி60.1 mg6%
ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலம்38.3 mcg10%
வைட்டமின் பி120.0 mcg0%
பேந்தோதெனிக் அமிலம்0.2 mg2%
கோலின்9.5 mg
பீட்டெய்ன்0.4 mg
தாது பொருட்கள்/ கனிமச்சத்துக்கள் 
ஒரு குறிப்பிட்ட தேந்தெடுக்கப்பட்ட நேரத்திற்கு தேவையான அளவு தினசரி மதிப்பு (%)
கால்சியம்            35.6 mg4%
இரும்பு0.4 mg2%
மக்னீசியம்10.7 mg3%
பாஸ்பரஸ்23.1 mg2%
பொட்டாசியம்151 mg4%
சோடியம்16.0 mg1%
ஜிங்க் அல்லது துத்தநாகம்0.2 mg1%
காப்பர் அல்லது தாமிரம்0.0 mg1%
மாங்கனீசு0.1 mg7%
செலினியம்0.3 mcg0%
ஃபுளூரைடு0.9 mcg

முட்டைக்கோஸை பயன்படுத்துவது எப்படி?

மேற்கூறிய அனைத்து ஊட்டச்சத்துக்களையும் பெற முட்டைக்கோஸை சரியான வழியில் பயன்படுத்த வேண்டியது அவசியம்; முட்டைக்கோஸை தேர்வு செய்யும் பொழுது பெரிய அளவிலான மற்றும் இலைகள் உறுதியாகவும் இறுக்கமாகவும் இருக்கக்கூடிய வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். முட்டைக்கோஸின் இலைகள் தளர்வாக இருந்தால், அது பழைய காய்கறி என்று பொருள்.

இந்த முட்டைக்கோஸ் காய்கறியை நீங்கள் பச்சையாக சமைக்காமல், வேக வைத்து, ஆவியில் சமைத்து, வறுத்து, பொரித்து என எப்படி வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். ஆனால், முட்டைக்கோஸை அதிகம் சமைத்து விட்டால், அது காயிலுள்ள ஊட்டச்சத்துக்களில் இழப்பினை ஏற்படுத்தி விடலாம் மற்றும் இது சல்ஃபுரஸ் வாசத்தை ஏற்படுத்தி விடும்.

கீழ்க்கண்ட டயட் உணவு முறையில் முட்டைக்கோஸை சேர்த்துக் கொள்ளலாம்:

  • காய்கறி சாலட்டில் துருவிய முட்டைக்கோஸை சேர்க்கலாம்
  • இரவு உணவில் உட்கொள்ளக்கூடிய சூப்பில் நறுக்கிய முட்டைக்கோஸை சேர்த்துக் கொள்ளலாம்
  • பொடியாக்கிய கருப்பு மிளகு, ஆலிவ் எண்ணெய், மைய அரைத்த பூண்டு இவற்றுடன் வறுத்த முட்டைக்கோஸை சேர்த்து உண்ணலாம்

சமைத்த முட்டைக்கோஸை காட்டிலும், பச்சையான முட்டைக்கோஸை உண்பது அதிக ஊட்டச்சத்துக்களை வழங்கும்; ஆனால், முட்டைக்கோஸை சமைத்தோ, பச்சையாகவோ உண்ணும் முன் அதன் சாதக பாதகங்களை பற்றி நன்கு அறிய வேண்டியது அவசியம் மற்றும் முறையான மருத்துவ ஆலோசனையை மேற்கொள்ள வேண்டியதும் அவசியம்.

முட்டைக்கோஸின் பக்க விளைவுகள்

Cabbage (Patta Gobhi) Benefits, Uses and Side Effects in Tamil
Image: Shutterstock

முட்டைக்கோஸை உண்பதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படலாம்; கூடவே சில பக்க விளைவுகளும் நிகழ வாய்ப்புண்டு. முட்டைக்கோஸ் உண்பதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் என்னென்ன என்று இப்பொழுது பார்க்கலாம்:

  • கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் அளிக்கும் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்

உணவு ரீதியான நோய்க்குறைபாட்டை தவிர்க்க பச்சையான முட்டைக்கோஸை உண்பதை தவிருங்கள்; முட்டைக்கோஸை உண்ணும் முன் அது சரியான முறையில் சமைக்கப்பட்டுள்ளதா என்பது சரி பார்த்து கொள்ளவும். இவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருப்பதன் மூலம் கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் அளிக்கும் சமயத்தில் தேவையற்ற நோய்க்குறைபாடுகள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

  • ஒவ்வாமைகள்

முட்டைக்கோஸ் காய்கறி குறித்த அல்லது இக்காய்கறி குடும்பத்தை சார்ந்த புரோக்கோலி மற்றும் காலிஃப்ளவர் போன்ற காய்கள் குறித்த ஒவ்வாமை இருக்கும் நபர்கள் முட்டைகோஸிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.

  • அதிகமாக இருக்கும் இரத்த சர்க்கரையை குறைக்க

ஏற்கனவே சர்க்கரை நோய்க்காக மருந்து உட்கொண்டு வரும் நபர்கள், முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக் கொள்ளும் முன் ஒரு முறை மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது; இவ்வாறு செய்வது உங்களின் இரத்த அழுத்தம் மிகவும் குறைந்து விடாமல் இருக்க உதவும்.

  • ஹைப்போ தைராய்டிசம்

முட்டைக்கோஸ் தைராய்டு ஹார்மோனின் செயல்பாட்டில் குறுக்கீடு செய்யலாம்; எனவே, ஹைப்போ தைராய்டிசம் உள்ள நபர்கள் முட்டைக்கோஸை உட்கொள்ளாமல் தவிர்க்கவும், மேலும் முட்டைகோஸ் உண்பது குறித்து ஒரு முறை மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளவும் (37).

  • அறுவை சிகிச்சையின் பொழுது பிரச்சனைகள்

அறுவை சிகிச்சையில் ஈடுபடும் அல்லது அறுவை சிகிச்சை முடிந்த நபர்களில் முட்டைக்கோஸ் இரத்த சர்க்கரையின் அளவை பாதிக்க வாய்ப்புண்டு. ஆகையால், அறுவை சிகிச்சைக்கு திட்டமிட்டிருக்கும் நபர்கள் மற்றும் சமீபத்தில் அறுவை சிகிச்சை முடிந்த நபர்கள் முட்டைக்கோஸ் உண்பதை குறைந்தது இரண்டு வார காலத்திற்காவது நிறுத்தி வைப்பது நல்லது.

முட்டைக்கோஸ் என்றாலே வெறுத்து ஒதுக்கும் நபர்கள் இந்த பதிப்பில் கூறப்பட்டுள்ள முட்டைக்கோஸ் வழங்கும் அற்புத நன்மைகளை பற்றி படித்து அறிந்த பின் அதனை உணவில் சேர்த்துக் கொள்ள முயலுங்கள்; முட்டைக்கோஸ் என்பது ஒரு முக்கிய, ஊட்டச்சத்து மிகுந்த காய்கறி. இந்த அருமையான காய்கறியை உட்கொள்வது உங்களுக்கு பல ஆரோக்கியமான நன்மைகளை வழங்கும் என்பதை நினைவில் நிறுத்துங்கள். முடிந்த அளவு முட்டைக்கோஸை பச்சையாக உண்ண முயலுங்கள் மற்றும் சமைத்த அல்லது பச்சையான முட்டைக்கோஸை உண்ணும் முன் மருத்துவருடன் நன்கு கலந்து ஆலோசித்து கொள்வது நல்லது.

எல்லா காய்கறிகளுடனும் ஒப்பிடுகையில், எல்லா வித சத்துக்கள், ஆன்டி ஆக்சிடென்ட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அடங்கிய ஒரே ஒரு காய்கறி முட்டைகோஸ் மட்டுமே! இதனை முடிந்த அளவுக்கு உங்களது உணவு முறையில் சேர்த்துக் கொள்ள முயலுங்கள்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் பிடிக்குமா? எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை நீங்கள் முட்டைக்கோஸை உண்பீர்கள்? முட்டைக்கோஸினால் நீங்கள் அடைந்த பலன்கள் என்னென்ன என்பது குறித்த தகவல்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் மூலம் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Was this article helpful?
thumbsupthumbsdown

Community Experiences

Join the conversation and become a part of our vibrant community! Share your stories, experiences, and insights to connect with like-minded individuals.

Latest Articles