இயற்கை முறையில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி? – How to Gain Weight Naturally in Tamil

Written by  • 
 

உலகில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றனர்; ஏனெனில் அதிகரித்த உடல் எடையை குறைப்பது ஒரு பெரும் சாதனையே! ஆனால், மொத்த மக்கள் தொகையில் இன்னொரு பெரும்பான்மை மக்கள் உடல் எடையை எப்படி அதிகரிக்க வேண்டும் என்று அறிய ஆவலோடு உள்ளார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

ஆம்! மக்களில் சிலர் உடல் எடையை அதிகரிப்பது எப்படி என்று தேடி அலைகின்றனர்; இவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று தான் சொல்ல வேண்டும். இவர்களை ஏன் அதிர்ஷ்டசாலி என்று குறிப்பிடுகிறேன் என்று எண்ணுகிறீர்களா?

ஆம்! இவர்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். உடல் எடை குறைக்க முயலுவோர் பிடித்ததை மறந்து, நெஞ்சை கல்லாக்கி கொண்டு டயட் உணவு முறையை கடைபிடிக்க வேண்டும்; ஆனால் இவர்களோ நினைத்ததை உண்டு, கலோரிகளை கண்டு பயம் கொள்ளாமல், உடற்பயிற்சி செய்யாமல் உண்ணுவதை மட்டுமே தொழிலாக கொள்வார்கள்; இந்த மக்களை அதிர்ஷ்டசாலிகள் என்று சொல்லாமல் வேறு என்னவென்று கூறுவது?!

உலக சுகாதார நிறுவனத்தின் கருத்துப்படி, 462 மில்லியன் வயது வந்த மக்கள் உடல் எடையை குறைவாக கொண்டுள்ளனர் (1). அதாவது இவர்களது உடல் எடை, உயரம் ஆகியவற்றை வைத்து கணக்கிடப்படும் உடல் எடை குறியீட்டு எண் (BMI) சராசரிக்கும் குறைவான அளவில் உள்ளது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் தங்களது உருவத்திற்கு ஏற்ற உடல் எடையை கொண்டு இருக்க வேண்டும்; எடை அதிகம் இருந்தாலும், உடல் எடை குறைவாக இருந்தாலும் அது உடலின் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்காது. ஆகையால், இந்த பதிப்பில் இயற்கையான முறையில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம்.

உடல் எடை குறைவாக இருப்பதற்கான காரணங்கள்

 • அதிக உடல் வளர்சிதை மாற்றம் – நம்மில் சில பேர் பிறப்பில் இருந்தே ஒல்லியாக இருப்பார்கள்; என்ன சாப்பிட்டாலும், எவ்வளவு சாப்பிட்டாலும் அவர்களது உடல் எடை அதிகரிக்கவே அதிகரிக்காது. இந்நபர்களின் உடல் வளர்சிதை மாற்றம் அதிகமாக இருப்பதால், கலோரி மிகுந்த உணவுகளை உட்கொண்டாலும் இவர்களது உடல் எடை அதிகரிப்பது இல்லை.
 • குடும்ப வரலாறு – சில மக்கள் இயற்கையிலேயே மெலிந்த தேகம் மற்றும் குறைவான BMI கொண்டவர்களாக தோற்றம் அளிக்கும் வகையிலான ஜீன்களை கொண்டு இருப்பார்கள்; இது குடும்ப மரபு மற்றும் வரலாறு வாயிலாக பிறப்பில் இருந்தே தோன்றுவது ஆகும்.
 • அதிக உடலியல் செயல்பாடு – சில நபர்கள் அதிக அளவிலான உடலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவார்கள்; அதாவது ஓடுதல், நீச்சல், ஏதேனும் ஒரு வகை விளையாட்டுக்களை விளையாடுதல் என ஏதேனும் ஒரு உடலியல் செயல்பாட்டினை மேற்கொள்வர். இச்செயல்பாடுகளால் அந்நபர்களின் உடல் எடை அதிகரிக்காமல், குறைவாக இருக்கலாம் மற்றும் இந்த செயல்பாடுகளின் பொழுது அவர்களின் உடலில் நாள் முழுதும் அதிக கலோரி இழப்பு தொடர்ந்து நடைபெற வாய்ப்புண்டு.
 • ஆரோக்கிய நிலைகள் – ஒரு நபருக்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆரோக்கிய சீர்கேடு நிலைகள் அல்லது நோய்கள் இருந்தால், அவர்களில் தற்காலிகமாக உடல் எடை குறைவு ஏற்படலாம். உடலில் ஏற்பட்ட நோய்க்குறைபாட்டால், வளர்சிதை மாற்றத்தில் திடீர் மாற்றம் ஏற்பட்டு, அவர்களது உடல் எடை குறையலாம். இது போன்ற ஆரோக்கிய சீர்கேடு நிலைகளுக்கு சில உதாரணங்கள்: புற்றுநோய், நீரிழிவு நோய், ஹைப்பர் தைராய்டிசம், காச நோய் போன்றவை ஆகும்.
 • மனஅழுத்தம் – மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணவு உட்கொள்ளும் வீதம் குறைந்து, உடல் எடை இழப்பு வேகமாக ஏற்படலாம். இப்படிப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு உடனடி மருத்துவ உதவி அவசியம்.
 • அழுத்தம் – ஒரு நபர் தொடர்ந்து மனதால் அல்லது உடல் சோர்வால் அழுத்தத்திற்கு உட்பட்டால், அவர்களது உடல் எடை திடீரென குறைய அதிக வாய்ப்பு உண்டு.

உடல் எடை அதிகரிப்பு குறிப்புகள்

உடல் எடையை அதிகரிப்பது என்பது உடனடியாக நிகழக்கூடிய விஷயம் அல்ல; அதற்கு சில காலம் ஆகலாம். இயற்கையான முறையில், ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்க உதவும் எடை அதிகரிப்பு குறிப்புகள், வழிகள் பற்றி ஒவ்வொன்றாக, விரிவாக பார்க்கலாம்.

தீர்வு 1: தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய்/ நெய் மற்றும் சர்க்கரை

உடல் எடையை அதிகரிக்க வழக்கமாக உட்கொள்ளும் கலோரி அளவை காட்டிலும் அதிகமான அளவு கலோரிகள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் அல்லது நெய் மற்றும் சர்க்கரை ஆகிய இரண்டுமே அதிக அளவு கலோரிகளை கொண்ட உணவு பொருட்கள் ஆகும்.

உங்களுக்கு தேவையானவை:
 • 1 தேக்கரண்டி தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் அல்லது நெய்
 • 1 தேக்கரண்டி சர்க்கரை
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • 1 தேக்கரண்டி தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய் அல்லது நெய் மற்றும் 1 தேக்கரண்டி சர்க்கரையை ஒன்றாக கலந்து, அக்கலவையை மதியம் மற்றும் இரவு உண்ணுவதற்கு அரை மணி நேரம் அதாவது 30 நிமிடங்களுக்கு முன்பாக உட்கொள்ள வேண்டும்
இந்த செய்முறையை எவ்வளவு அடிக்கடி நீங்கள் செய்ய வேண்டும்?

இக்கலவையை ஒரு மாத காலத்திற்கு தொடர்ந்து உட்கொண்டு வந்தால், உடல் எடை அதிகரிப்பில் நல்ல மாற்றம் ஏற்படுவதை கண்கூட காணலாம்.

தீர்வு 2: மாம்பழம் மற்றும் பால்

பழ வகைகளில் மாம்பழம் அதிக கலோரிகளை கொண்ட ஒரு பழ வகை ஆகும்; ஒரு நடுத்தர மாம்பழம் 150 கலோரிகளை கொண்டது, இரண்டு நடுத்தர மாம்பழங்களை உட்கொண்டால் ஒரே சமயத்தில் 300 கலோரிகளை உடல் பெற்றுவிடும்.

உங்களுக்கு தேவையானவை:

 ஒரு பெரிய மாம்பழம்

 • 1 கப் பால்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • மாம்பழத்தின் தோலுரித்து, அதிலிருந்து விதையை நீக்கி பழச்சதையை எடுத்து வைத்து கொள்ளவும்
 • அதனுடன் பால் சேர்த்து கூழாக அரைத்து உட்கொள்ளவும்
இந்த செய்முறையை எவ்வளவு அடிக்கடி நீங்கள் செய்ய வேண்டும்?

முன்பே கூறியது போல் அதிக கலோரிகளை கொண்ட மாம்பழத்துடன் பால் சேர்த்து கூழாக்கப்பட்ட கலவையை தொடர்ந்து உண்டு வந்தால், உடல் எடை அதிகரிப்பில் ஒரு நல்ல மாற்றத்தை உங்களால் காண முடியும்.

தீர்வு 3: அஸ்வகந்தா

Ashwagandha
Image: Shutterstock

உடலுக்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை அதிகரிக்க பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய பொருள் அஸ்வகந்தா ஆகும்; இது தசைகளின் நிறை மற்றும் பலத்தை அதிகரிக்க உதவுவதாக பல ஆய்வறிக்கைகள் கருத்து தெரிவித்துள்ளன (2). இந்த அஸ்வகந்தா பொடியை, உட்கொள்வதை நிறுத்திய பின் அல்லது உட்கொள்வதை குறைத்த பின் கூட, உடலில் உருவான தசைகளின் நிறை நீண்ட காலத்திற்கு அப்படியே இருக்கும்.

உங்களுக்கு தேவையானவை:
 • 100 கிராம் அஸ்வகந்தா
 • 100 கிராம் வறண்ட இஞ்சி பொடி
 • 100 கிராம் சர்க்கரை
 • ½ தம்ளர் தண்ணீர்
 • 1 தம்ளர் பால்
 • ஒரு பாத்திரம் (கொதிக்க வைக்க தேவையான)
 • 1 காற்று புகாத புட்டி
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 1. அஸ்வகந்தா, இஞ்சி, சர்க்கரை ஆகிய அனைத்தையும் கலந்து பொடி செய்து கொள்ளுங்கள்; இந்த பொடியை ஒரு காற்று புகாத புட்டியில் போட்டு வைக்கவும்
 2. ஒரு பாத்திரத்தை எடுத்து, நீர் மற்றும் பாலை சேர்த்து சூடுபடுத்திக் கொள்ளவும்
 3. பொடித்து வைத்துள்ள அஸ்வகந்தா பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்து, நீர் மற்றும் பால் சேர்த்த கலவையில் கலந்து கொள்ளவும்
 4. இக்கலவையை நீர் வற்றும் வரை, ஒரு சில நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும்
 5. இவ்வாறு தயாரித்த பானத்தை தினமும் குடியுங்கள்

இந்த செய்முறையை எவ்வளவு அடிக்கடி நீங்கள் செய்ய வேண்டும்?

இந்த அஸ்வகந்தா பொடியை பாலில் கலந்து, நாள் ஒன்றுக்கு 1-2 முறைகள் பருகலாம்; இச்செய்முறையை தொடர்ந்து ஒரு மாதம் பருகி வந்தால், உடலில் நல்ல விதமான மாற்றங்களை உட்கொள்ளலாம்.

தீர்வு 4: அத்திப்பழம் மற்றும் உலர் திராட்சைகள்

அத்திப்பழம், பருப்புகள், கடலைகள் மற்றும் உலர் திராட்சைகள் போன்றவற்றை உட்கொள்வது படிப்படியாக உடல் எடையை அதிகரிக்க உதவும் மிகச்சிறந்த வழி ஆகும்; கொலராடோ பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆரோக்கிய வழிகாட்டி அறிக்கையின் கருத்துப்படி, கடலைகள் மற்றும் கடலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட வெண்ணெய், அதிக புரதங்களை கொண்ட பேரீட்சை, ஆப்ரிகாட்கள், ப்ரூனேக்கள் போன்ற உலர்ந்த பழங்கள், வைட்டமின் ஈ, மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆகியவை  நிறைந்த உணவுகள் மற்றும் நொறுக்குத்தீனிகளை உட்கொண்டால் அது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் கலோரிகளை அளிக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது (3).

அத்திப்பழம் மற்றும் உலர் பழங்கள் போன்றவற்றை நறுக்கி ஐஸ்கிரீம் போன்ற உணவுகள் மீது தூவி அல்லது உலர் பருப்புகளில் இருந்து தயாரிக்கப்பட்ட வெண்ணெய் வகைகளை கொண்டு பிரட்டில் தடவி உட்கொள்ளலாம். உலர் திராட்சை மற்றும் உலர் பழ வகை உணவுகளை எப்படி சரியான முறையில் உட்கொள்வது என்பது குறித்த வழிகளை பற்றி கீழே பார்க்கலாம்.

உங்களுக்கு தேவையானவை:
 • 3 கப்கள் பச்சையான பாதாம்கள், வாதுமை கொட்டை எனப்படும் வால்நட்கள் அல்லது முந்திரி பருப்புகள்
 • ½ தேக்கரண்டி உப்பு
 • ½ தேக்கரண்டி பட்டை பொடி
 • சுவைக்கு தேவையான அளவு தேன்
 • மைக்ரோ வேவ் ஓவன்
 • பேக்கிங் ட்ரே
 • பேக்கிங் ஷீட்
 • உணவு (ஃபுட்) ப்ராசசர்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 1. ஓவனை 180 டிகிரி செல்ஸியஸ் அளவில் சூடுபடுத்தி கொள்ளவும்; பேக்கிங் ட்ரேயில் பேக்கிங் ஷீட் விரித்து வைத்துக் கொள்ளவும்.
 2. கடலைகளை ட்ரேயில் பரப்பி, அதை 10 நிமிடங்களுக்கு ஓவனில் வைத்து பேக் செய்யவும்; இடையில் ஒன்று அல்லது இருமுறை கிளறி விட்டுக்கொள்ளவும்.
 3. ஓவனில் இருந்து வெளியே எடுத்த பின், கடலைகளை ஆற வையுங்கள்.
 4. இவை ஆறிய பின், கடலைகளை உணவு (ஃபுட்) ப்ராசசருக்கு மாற்றி விடவும்; இவை கிரீமாக மாறும் வரை அரைக்கவும்.
 5. இதை செய்து முடிக்க 10-12 நிமிடங்கள் வரை ஆகலாம்; இதை செய்யும் பொழுது அரைப்பானின் ஓரங்களை அடிக்கடி சுரண்டி விட்டுக்கொள்ளவும்.
 6. கலவை கிரீமாக மாறிய பின், அதில் சிறிது உப்பு மற்றும் தேவையெனில் இதர சுவை சேர்த்து கொள்ளலாம்.

இந்த செய்முறையை எவ்வளவு அடிக்கடி நீங்கள் செய்ய வேண்டும்?

வீட்டில் கடலை வெண்ணெய்களை தயார் செய்து, ஒரு மாத காலம் வரை குளிர் சாதன பெட்டியில் வைத்து சேமித்து பயன்படுத்தலாம்; இந்த கடலை வெண்ணெய் தடவிய முழுதானிய பிரட் அல்லது டோஸ்ட்டை தினமும் உட்கொள்ளலாம்.

தீர்வு 5: நிலக்கடலை வெண்ணெய்/ வேர்க்கடலை வெண்ணெய்

வேர்க்கடலை வெண்ணெயில் இயற்கையிலேயே நிறைந்துள்ள மோனோ சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உடல் நலத்திற்கு அதிக ஆரோக்கியம் அளிக்கக்கூடியவை ஆகும்.

உங்களுக்கு தேவையானவை:
 • வேர்க்கடலை வெண்ணெய்/ நிலக்கடலை வெண்ணெய்
 • பிரட் அல்லது ரொட்டிகள்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • பிரட் அல்லது ரொட்டி போன்ற உடல் எடையை கூட்டும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளில் வேர்க்கடலை வெண்ணெயை தடவி உட்கொள்ளலாம்
இந்த செய்முறையை எவ்வளவு அடிக்கடி நீங்கள் செய்ய வேண்டும்?

இவ்வாறு கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளின் மீது கொழுப்புச்சத்தினை கொண்ட நிலக்கடலை வெண்ணெயை தடவி, இவற்றை அடிக்கடி உண்டு வந்தால் உடல் எடை நன்கு அதிகரிக்கும்.

தீர்வு 6: வாழைப்பழம் மற்றும் பால்

Banana and milk
Image: Shutterstock

எல்லோராலும் எளிதில் வாங்கி பயன்படுத்தக்கூடிய ஒரு பழம் வாழைப்பழம் ஆகும்; வாழைப்பழத்தில் வெல்லம் மற்றும் கலப்பு சீனி சத்து நிறைந்து உள்ளது. வாழைப்பழத்தில் கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்துள்ளன; பாலிலும் இச்சத்து அதிகம் காணப்படுகிறது.

உங்களுக்கு தேவையானவை:
 • வாழைப்பழங்கள்
 • பால்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • வாழைப்பழங்களை அப்படியே உண்டு வந்தால், உடனடி சக்தி கிடைக்கும்
 • பாலை காய்ச்சி பருகினாலும் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும்
 • இவ்வாறு உடனடி ஆற்றல் தரக்கூடிய இரண்டையும் ஒன்றாய் சேர்த்து கூழாக்கி, உட்கொண்டால் அது உடனடி சக்தியுடன் உடல் எடை அதிகரிப்பையும் ஏற்படுத்தும்.
இந்த செய்முறையை எவ்வளவு அடிக்கடி நீங்கள் செய்ய வேண்டும்?

தினமும் 2 முதல் 3 வாழைப்பழங்களை உண்பது அல்லது இவ்வாழைப்பழங்களுடன் பால் சேர்த்து கூழாக்கி உட்கொள்வது, உடலுக்கு உடனடி சக்தியை அளித்து, உடல் எடையை அதிகரிக்க உதவும்.

தீர்வு 7: பருப்புகள்

முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் எனப்படும் வாதுமை கொட்டை போன்ற பருப்புகளை உட்கொள்வது உடலுக்கு பல நன்மைகளை வழங்க உதவுவதுடன், உடலின் எடையை அதிகரிக்கவும் உதவும்.

உங்களுக்கு தேவையானவை:
 • ஒரு கை நிறைய முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் எனப்படும் வாதுமை கொட்டை போன்ற பருப்பு வகைகள்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • தேவையான பொருட்களில் கூறப்பட்ட பருப்பு வகைகளை தினமும் உட்கொள்ள வேண்டும்
இந்த செய்முறையை எவ்வளவு அடிக்கடி நீங்கள் செய்ய வேண்டும்?

இவ்வாறு முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட் எனப்படும் வாதுமை கொட்டை போன்ற பருப்பு வகைகளை தினமும் உட்கொள்வதால், அவற்றில் இருக்கும் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு சத்து மற்றும் பல சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குவதுடன் உடலின் எடையை அதிகரிக்கவும் உதவுகின்றன.

தீர்வு 8: மன அழுத்தமின்மை

Lack of stress
Image: Shutterstock

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், கனிமச்சத்துக்கள் சரியாக கிடைப்பதுடன் உள்ளமும் ஆரோக்கியமான மனநிலையில் இருந்தால் மட்டுமே உடலின் எடை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கும்.

உங்களுக்கு தேவையானவை:
 • மகிழ்ச்சியான மனநிலை
 • அழுத்தத்தை சமாளிக்கும் திறன்
 • யோகா அல்லது தியான பயிற்சிகள்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • வாழ்க்கையில் அல்லது வேலையில் ஏதேனும் ஒரு விஷயம் காரணமாக மனஅழுத்தம் ஏற்பட்டால், அந்த சூழ்நிலையை சமாளித்து மனதின் அமைதி கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
 • இதை பழக்கப்படுத்த தியானம் அல்லது யோகா பயிற்சிகளை செய்யலாம்
இந்த செய்முறையை எவ்வளவு அடிக்கடி நீங்கள் செய்ய வேண்டும்?

தினமும் காலையில் யோகா அல்லது தியான பயிற்சிகளை செய்து வந்தால், மனதில் அழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்; மனதில் கவலை சூழும் சமயங்களிலும் கூட இம்முறையை கடைபிடிக்கலாம்.

தீர்வு 9: மதிய நேர தூக்கம்

உடல் எடை அதிகரிக்க உடல் நலம், மன நலம் ஆகியவற்றுடன் போதிய ஓய்வு மற்றும் உறக்கம் அவசியம். அதிலும் குறிப்பாக மதியம் உண்ட பின் உறங்குவது நிச்சயமாக உடல் எடையை அதிகரிக்க உதவும்.

உங்களுக்கு தேவையானவை:
 • நல்ல, ஆழ்ந்த மதிய நேர உறக்கம்
நீங்கள் செய்ய வேண்டியது என்ன?
 • நன்கு வயிறு நிறைய சாப்பிட்ட பின், உண்ட உணவு செரிக்க இருபது முதல் முப்பது நிமிடங்கள் இடைவெளி விட்டு உறங்க வேண்டும்
 • இவ்வாறு மேற்கொள்ளும் மதிய நேர உறக்கத்தை மாலை வரை மேற்கொள்ளலாம்
இந்த செய்முறையை எவ்வளவு அடிக்கடி நீங்கள் செய்ய வேண்டும்?

உடல் எடையை அதிகரிக்க விரும்பும் நபர்கள், இவ்வாறு மதிய உணவுக்கு பின் உறங்குவதை ஒவ்வொரு நாளும் கூட கடைபிடிக்கலாம்; இம்முறை நிச்சயம் உடல் எடை அதிகரிப்பை ஏற்படுத்தும்.

உடல் எடை அதிகரிப்பிற்கு உதவும் பிற குறிப்புகள்

உடல் எடை அதிகரிக்க இயற்கை முறையில் மற்றும் ஆரோக்கியமான வழியில் உதவக்கூடிய குறிப்புகளை குறித்து பார்த்து வருகிறோம்; இப்பொழுது உடல் எடை அதிகரிப்பிற்கு உதவும் பிற குறிப்புகளை பற்றியும் பார்க்கலாம்.

 • உணவு உட்கொள்ளும் பொழுது நடுவில் நீர் பருகுவது, உங்களை குறைந்த அளவிலான உணவினை உட்கொள்ள செய்யும்; ஆகையால், உணவு உண்ணும் பொழுது இடையில் தண்ணீர் குடிப்பதை தவிருங்கள்.
 • இலேசான அல்லது கொழுப்பு ஆடை நீக்கப்பட்ட உணவுகளை தவிருங்கள்; உதாரணத்திற்கு, பால் அல்லது யோகர்ட் குடிக்கும் பொழுது அவற்றில் ஆடை அதாவது கொழுப்பு நீக்கப்படாத உணவுகளை உட்கொள்ளுங்கள்.
 • அதிக அளவு உணவுகளை உட்கொள்ளுங்கள்; மேலும் பெரிய தட்டுக்களில் அதிக அளவு உணவுகளை வைத்து சாப்பிடுங்கள்.
 • நாள் முழுதும் அடிக்கடி உணவு பொருட்களை உட்கொள்ளுங்கள்.
 • உணவுகளை உட்கொள்வதோடு மட்டும் அல்லாமல், உணவுகளுக்கு இடையில் நொறுக்குத்தீனிகளையும் சாப்பிடுங்கள்; இந்த நொறுக்கு தீனிகள் கலோரிகள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
 • ஒரு வாரத்திற்கு 3 முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை உடல் எடை பயிற்சிகளை செய்யலாம்.
 • உடல் எடையை அதிகரிப்பதற்கு செயற்கையான சப்ளிமெண்ட்டுகளை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக இயற்கையான அல்லது மூலிகை பொருட்களை பயன்படுத்தலாம். இதன் மூலம் ஏற்கனவே உடலில் உருவான தசைகளுக்கு எவ்வித பாதிப்பு மற்றும் தசை இழப்பு இல்லாமல், இயற்கை முறையில் உடல் எடையை அதிகரிக்கலாம்.
 • சரியான நேரத்தில் முறையாக உறங்குவது தசை வளர்ச்சியை மேம்படுத்த உதவும்; இரவில் சரியாக, நல்ல முறையில் உறங்குங்கள்.

இயற்கை முறையில் காணப்படும் உடல் எடை அதிகரிப்பு குறிப்புகள் ஒவ்வொன்றை பற்றியும் விரிவாக படித்து அறிந்தோம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள அனைத்து முறைகளுமே சரியான பலன்களை அளிக்கக்கூடியவையே! இவற்றில் எந்த ஒரு முறையையும் மேற்கொள்ளும் முன் முறையான மருத்துவ கலந்தாய்வு மேற்கொள்வது நல்லது.

இயற்கையான மற்றும் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிப்பது எப்படி என்றும், உடல் எடையை அதிகரிக்க உதவும் எடை  அதிகரிப்பு குறிப்புகள் என்னென்ன என்றும் இப்பதிப்பில் படித்து அறிந்தோம். இப்பதிப்பில் கூறப்பட்ட விஷயங்களில் நீங்கள் எதையேனும் முயற்சித்தீர்களா? அதனால் பலன் ஏதும் கிடைத்ததா என்பது போன்ற தகவல்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ் வாயிலாக எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

Was this article helpful?
thumbsupthumbsdown

  Latest Articles